இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் வாகனங்களுக்கான "தடைபட்ட தேவை" (pent-up demand) தற்போது ஸ்திரமடைந்து வருவதாகவும், சந்தை நிலைமைகள் மேம்படுவதால் வாகனங்களின் விலை மேலும் குறையும் என்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் நாணயக் கொள்கை மீளாய்வுக் கூட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜூலை, ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் திறக்கப்பட்ட கடன் கடிதங்கள் (LCs) அதிகரித்தமையால் வாகனங்களுக்கான தேவை எதிர்பார்த்ததை விட அதிகமாக காணப்படுகிறது.
எவ்வாறாயினும், கடந்த இரண்டு மாதங்களாக இந்தத் தேவை குறைந்து வருவதாகவும், இது தொடர்ந்தும் குறைவதற்கான அறிகுறிகள் காணப்படுவதாகவும், இந்தத் தேவைக் குறைவு , மோட்டார் வாகனங்களின் விலை மேலும் வீழ்ச்சியடைய வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் மத்திய வங்கியின் தரவுகளின்படி, இலங்கை இதுவரை 1.2 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக பெறுமதியான வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Latest News
இலங்கை எதிர் இங்கிலாந்து 2 ஆவது இருபதுக்கு 20 போட்டி : இங்கிலாந்துக்கு 146 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!
Local
18 September 2026
இங்கிலாந்து எதிர் இலங்கை இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி: இங்கிலாந்து அணி களத்தடுப்பு தேர்வு!
Local
17 September 2026
ஒன்லைன் மூலம் தொடருந்து பயணச்சீட்டுகளைப் பெறும் வசதி அறிமுகம்
Local
17 September 2026
மாலபே பகுதியில் துப்பாக்கி ரவைகள், கைவிலங்கு மீட்பு
Local
17 September 2026
100 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் கடத்தல் - வர்த்தகருக்கு மரண தண்டனை
Local
17 September 2026
ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு
Local
17 September 2026
2013 ஐபிஎல் சூதாட்ட வழக்கு: ஒக்டோபர் 9ஆம் திகதிக்குள் பதிலளிக்க தோனிக்கு உத்தரவு
Local
17 September 2026
"வாழ்க தமிழ், வளர்க தமிழ்!" - சீனப் பல்கலைக்கழகத்தில் தமிழில் சிறப்புப் பட்டம் பெற்ற சீன மாணவியின் நெகிழ்ச்சி!
Local
17 September 2026
தெமட்டகொடவில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான முச்சக்கரவண்டி சாரதி உயிரிழப்பு
Local
17 September 2026
புசல்லாவையில் தொடரும் சோகம் - ஒரே நாளில் 2 தொழிலாளர்கள் பாம்புக்கடிக்கு இலக்கு!
Local
17 September 2026