அதிதீவிர வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களின் பின்னரான காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கான சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
இதன்படி, நடமாடும் நீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகள் இரண்டை இலங்கை கடற்படை செயற்படுத்தி வருவதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார்.
பேரிடரின் பின்னரான நிலைமை தொடர்பான நடவடிக்கைகளின் பின்னூட்டம் தொடர்பில் தெளிவுப்படுத்தி, வெளியிடப்பட்ட காணொளியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கண்டி - தெல்தெனிய மற்றும் புத்தளம் - ஆராச்சிக்கட்டு ஆகிய பகுதிகளில் குறித்த நீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகள் செயற்படுத்தப்படுவதாகவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.
அத்துடன் பொது இடங்களை சுத்திகரித்து, அவற்றை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான செயற்பாடுகளில் கடற்படையின் தொழில்நுட்ப பிரிவு செயற்பட்டு வருகிறது.
இதேவேளை, அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளும், நிவாரண செயற்பாடுகளும் கடற்படையினரால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார்.
Latest News
வைபவ் சூர்யவன்ஷி டெஸ்ட் போட்டிகளுக்கானவர் இல்லை: முன்னாள் இங்கிலாந்து வீரர் கருத்து!
Local
20 September 2026
ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் : கப்பல் போக்குவரத்துக்கு புதிய சிக்கலா?
Local
20 September 2026
AI துறையை அழிக்க சதி? எதிர்த்தரப்பை வீழ்த்த 'AI FORCE' அமைப்பு உருவாக்கம் - ட்ரம்ப் அறிவிப்பு!
Local
20 September 2026
சர்வதேச சந்தையில் அதிகரித்த தங்கத்தின் விலை!
Local
20 September 2026
ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி!
Local
20 September 2026
நடிகர் சிவாஜி கணேசனின் மகள் சாந்தி காலமானார்!
Local
20 September 2026
கண்டியில் மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
Local
20 September 2026
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை : ஈரான் முன்வைத்த முக்கிய நிபந்தனைகள்!
Local
20 September 2026
மத்திய கிழக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல்: அமெரிக்கர்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்த அமெரிக்க தூதரகங்கள்!
Local
20 September 2026
நுவரெலியாவுக்கு 2ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை : 6 மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்!
Local
20 September 2026