General11 December 2025

ட்ரம்பின் புதிய விசா திட்டம்

மிக எளிதில் நிரந்தரக் குடியுரிமையை பெறுவதற்காக “ட்ரம்ப் கோல்ட் கார்ட்” என்ற புதிய விசா திட்டத்தை அமெரிக்கா அறிமுகப்படுத்தியுள்ளது. 
 
அமெரிக்க நிறுவனங்கள், திறமையானவர்களை தக்க வைத்துக் கொள்ளும் வகையில் 1 மில்லியன் டொலர் 'கோல்ட் கார்ட்' விசாவை, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிமுகப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 
 
அமெரிக்காவுக்கு சென்று வேலை பார்ப்பதற்கென பல வகையான விசாக்கள் வழங்கப்படுகின்றன. 
 
இவற்றில் எச்1பி விசா மிகவும் முக்கியமானது. 
 
இவ்வாறு விசா பெற்று அங்கு சென்று வேலை பார்ப்போருக்கு, அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்காக, 'கிரீன் கார்ட்' வழங்கப்படுகிறது. 
 
தற்போது அமெரிக்காவில் வசிக்கவும், வேலை பார்க்கவும், 'கோல்ட் கார்ட்' விசாவை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிமுகப்படுத்தியுள்ளார். 
 
வெளிநாட்டினர் அமெரிக்க அரசாங்கத்துக்கு 1 மில்லியன் டொலரை நன்கொடையாக வழங்குவதன் மூலம் நிரந்தரமாக அமெரிக்காவில் தங்கும் தகுதியை பெறுவதற்கு இந்த கோல்ட் கார்ட் விசா அனுமதிக்கிறது.
Related recommendation
Hiru TV News | Programmes