General12 December 2025

மின்னல் தாக்கம் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டின் பல மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தாக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
அதன்படி, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில பகுதிகளுக்கு பலத்த மின்னல் தாக்கம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
அந்தப் பகுதிகளில் மழை பெய்யும் போது பலத்த மின்னல் மற்றும் தற்காலிக பலத்த காற்று வீசக்கூடும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது. 
 
இந்நிலையில், இன்று காலை 8.30 மணி வரையான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 163.4 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதுளையின் நீல்பான்கந்துர பகுதியில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes