General13 December 2025

சஜித் ரணில் சந்திப்பு

எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. 
 
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்கவின் மகளின் திருமண வைபவத்தில் அவர்கள் இருவரும் சந்தித்ததாக தெரிவிக்கப்படுகிறது. 
 
திருமண நிகழ்ச்சியின் போது, மணமகள் சார்பில் சஜித் பிரேமதாசவும், மணமகன் சார்பில் ரணில் விக்ரமசிங்கவும் சாட்சிக் கையொப்பமிட்டதாகவும் அறியமுடிகிறது. 
 
திருமணச் சாட்சியாகக் கையொப்பமிட்ட ரணில் விக்ரமசிங்கவுக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நீண்ட பேச்சுவார்த்தை எதுவும் இடம்பெறவில்லை என்றாலும், மிகச் சுருக்கமான கருத்துப் பரிமாற்றம் ஒன்று நடந்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes