General22 January 2026

மொத்த பணவீக்கம் உயர்வு

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெணுக்கு அமைய, ஆண்டு அடிப்படையில் கணக்கிடப்படும் மொத்த பணவீக்க விகிதம் 2025 ஆண்டு டிசம்பரில் 2.9 வீதமாக உயர்ந்துள்ளது. 
 
இது, கடந்த 2025 நவம்பர் மாதத்தில் பதிவான 2.4 வீதத்துடன் ஒப்பிடுகையில், சற்று அதிகம் என்று குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 
 
இதற்கிடையில், உணவுப் பொருட்களின் பணவீக்க 2025 டிசம்பரில் 4.4 வீதமாக உயர்ந்துள்ளது. 
 
அத்துடன், உணவுப் பொருட்களைத் தவிர்த்த பணவீக்க 2025 டிசம்பரில் 1.6 வீதமாக உயர்ந்துள்ளதாக குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes