General29 January 2026

தவறான குறுஞ்செய்தி அனுப்பியவருக்கு நடிகை கொடுத்த அதிரடி சிகிச்சை

சென்னையில் இன்ஸ்டாகிராமில் தவறான குறுஞ்செய்தி அனுப்பிய நபரை துணை நடிகை ஸ்ரீ அஸ்வினி அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
துணை நடிகை ஸ்ரீ அஸ்வினிக்கு இன்ஸ்டாகிராமில் மணிகண்டன் என்பவர் தவறான குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். 
 
இதனை பார்த்து கோபமடைந்த நடிகை ஸ்ரீ அஸ்வினி குறுஞ்செய்தி அனுப்பிய உணவக ஊழியர் மணிகண்டன் என்பவரை உணவகத்திற்கு நேரிலே சென்று நடுவீதியில் வைத்து அடித்து அவரை காவல்துறையில் ஒப்படைத்தார். 
 
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes