General30 January 2026

78ஆவது சுதந்திர தினம்: கொழும்பில் இன்று முதல் விசேட போக்குவரத்துத் திட்டம்

எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி நடைபெறவுள்ள தேசிய சுதந்திர தின விழாவின் ஒத்திகை நடவடிக்கைகள் இன்று (ஜனவரி 30) முதல் ஆரம்பமாகவுள்ளதால், கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்துப் பிரிவு பிரதி காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார். 
 
ஒத்திகை நாட்கள்: ஜனவரி 30 முதல் பெப்ரவரி 02 வரை காலை வேளைகளிலும், பெப்ரவரி 03 ஆம் திகதி பிற்பகலிலும் சுதந்திர சதுக்கப்பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும். 
 
சுதந்திர தினம்: பெப்ரவரி 04 ஆம் திகதி அதிகாலை 5.00 மணி முதல் விழா நிறைவடையும் வரை வீதிகள் மூடப்பட்டிருக்கும். 
 
மூடப்படும் பிரதான வீதிகள்: 
 
சுதந்திர மாவத்தை, ஸ்டான்லி விஜேசுந்தர மாவத்தை, பௌத்தாலோக மாவத்தை (டொரிங்டன் சந்தியிலிருந்து பிரேமகீர்த்தி டி அல்விஸ் மாவத்தை வரை), மெயிட்லண்ட் கிரசன்ட், மெயிட்லண்ட் பிளேஸ் மற்றும் விஜேராம மாவத்தை ஆகிய வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும். ஆனந்த குமாரசுவாமி மாவத்தை மற்றும் விகாரமகாதேவி பூங்காவைச் சூழவுள்ள வீதிகள் அணிவகுப்புப் படைகளின் தரிப்பிடங்களாகப் பயன்படுத்தப்படுவதால் மூடப்படும். 
 
மாற்று வழிகள் மற்றும் தரிப்பிடங்கள்: 
 
நந்தா மோட்டார்ஸ் பகுதியிலிருந்து வருபவர்கள் சுதந்திர சதுக்கச் சந்தியில் வலதுபுறமாகத் திரும்பி பிலிப் குணவர்தன மாவத்தை ஊடாக பௌத்தாலோக மாவத்தையை அடையலாம். 
 
தும்முல்ல பகுதியிலிருந்து வருபவர்கள் விஜேராம மாவத்தை ஊடாக ஹோட்டன் பிளேஸை அடைய முடியும். 
 
அதிதிகளுக்காக BMICH, CR & FC மைதானம் மற்றும் புனித பீற்றர் கல்லூரி மைதானம் ஆகியவற்றில் விசேட வாகனத் தரிப்பிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
Related Recomands
Hiru TV News | Programmes