General30 January 2026

பிரதீப் ரங்கநாதனின் 'LIK' ரிலீஸ் எப்போது? : நீண்ட காத்திருப்புக்குப் பின் வெளியான தகவல்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் மற்றும் கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள 'லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி' (Love Insurance Company - LIK) திரைப்படம், நீண்ட காத்திருப்புக்குப் பிறகு வரும் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். 
 
ஒரு முக்கிய திருப்பமாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் விறுவிறுப்பான நடிப்பிற்குப் பெயர் பெற்ற எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 
 
நயன்தாரா மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார். 
 
ஏற்கனவே வெளியான இப்படத்தின் பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. 
 
கடந்த ஆண்டு காதலர் தினம் முதல் பலமுறை ரிலீஸ் திகதிகள் அறிவிக்கப்பட்டு (செப்டம்பர் 18, அக்டோபர் 17, டிசம்பர் 18) தள்ளிப்போன நிலையில், தற்போது பெப்ரவரி 12 அல்லது 13 ஆம் திகதிகளில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 
 
காதலர் தின வார இறுதியில் இப்படம் ரசிகர்களுக்கு ஒரு கலர்புல் ட்ரீட்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Recomands
Hiru TV News | Programmes