ஈலோன் மஸ்க்கிற்குச் சொந்தமான எக்ஸ் தளத்தின் மென்பொருளான 'Grok', பெண்களினதும் சிறுவர்களினதும் புகைப்படங்களை தவறாக மாற்றியமைப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சுவீடன் நாட்டின் துணைப் பிரதமர் எப்பா புஷ் (Ebba Busch), தானும் இவ்வாறான பாதிப்புக்கு உள்ளானதாகத் தெரிவித்துள்ளார்.
Grok மென்பொருள் மூலம் கடந்த இரண்டு வாரங்களில் சுமார் 30 இலட்சம் பாலியல் ரீதியான புகைப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஆயிரக்கணக்கானவை சிறுவர்களுடையவை என்றும் கூறப்படுகின்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் 'டிஜிட்டல் சேவைகள் சட்டத்தின் கீழ் விசாரணை முன்னெடுக்கப்படுகிறது. Grok தொழில்நுட்பத்தினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை 'X' நிறுவனம் சரியாகக் கையாண்டதா என்பது குறித்து ஐரோப்பிய ஆணையம் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்ந்தும் இவ்வாறான தவறுகள் நடந்தால், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் அந்தத் தளத்தையே தடை செய்யும் அதிகாரம் ஒன்றியத்திற்கு உண்டு.
எனினும், தற்போதைக்கு அபராதம் விதிக்கவே அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான வர்த்தகப் பிரச்சினைகள் காரணமாக இந்த விசாரணைகள் ஆரம்பத்தில் சற்றுத் தாமதமானதாகக் கூறப்படுகிறது.
எனினும், தனது பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் உறுதியாக இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனிநபர் உரிமைகளை மீறும் இத்தகைய செயற்பாடுகளுக்கு எதிராக எடுக்கப்படும் இந்த நடவடிக்கை, உலகளாவிய ரீதியில் ஒரு முக்கிய முன்னுதாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Latest News
இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி மழைக் காரணமாக தாமதமானது
Local
30 January 2026
துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பிப்பதற்கான காலக்கெடு: பாதுகாப்பு அமைச்சு அவசர அறிவிப்பு
Local
30 January 2026
305 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுகள் தீயிட்டு அழிப்பு: பயணிகளுக்குச் சுங்கம் கடும் எச்சரிக்கை
Local
30 January 2026
இந்தோனேசியாவில் பரபரப்பு: திருமணத்திற்கு புறம்பான உறவு மற்றும் மதுபாவனைக்காக 140 கசையடிகள்
Local
30 January 2026
கடனட்டை முடக்கம் மற்றும் போலி அழைப்புகள்: பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை
Local
30 January 2026
இலங்கை காவல்துறையில் 32,000 வெற்றிடங்கள்: விரைவில் 10,000 பேர் ஆட்சேர்ப்பு
Local
30 January 2026
மோல்டோவா வேலைவாய்ப்பு மோசடி: பொதுமக்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அவசர எச்சரிக்கை
Local
30 January 2026
டிட்வா சூறாவளி நிவாரணம்: நஷ்டஈடு வழங்கும் பணிகள் இறுதி கட்டத்தில்
Local
30 January 2026
60 வீதமான போக்குவரத்து ஓட்டுநர்கள் போதைப்பொருளுக்கு அடிமை - அமைச்சர் பிமல் ரத்நாயக்க எச்சரிக்கை
Local
30 January 2026
நவீன தொழில்நுட்பத்துடன் கல்வித்துறையில் பாரிய மாற்றம் - பிரதமர் அறிவிப்பு
Local
30 January 2026