இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலுள்ள அரசாங்கப் பாடசாலைகள் மற்றும் விடுதிகள் மூன்றில் உணவு உட்கொண்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீரென சுகவீனமடைந்துள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் சங்காரெட்டி, கம்மம் மற்றும் வனபர்த்தி ஆகிய மாவட்டங்களிலேயே இச்சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
வெங்கடாபூர் அரச பாடசாலையில் மதிய உணவு உட்கொண்ட 45 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பரிமாறப்பட்ட கறி ஒன்றில் துர்நாற்றம் வீசுவதாக மாணவர்கள் முறையிட்டும், அதிகாரிகள் அதனைப் பொருட்படுத்தவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் வாந்தி மற்றும் வயிற்று வலி காரணமாக 23 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போடியதண்டா அரச பாடசாலையில் 38 மாணவர்கள் உணவு நஞ்சாகியமையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் 10 மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். அரச மாணவிகள் விடுதி ஒன்றில் இரவு உணவு உட்கொண்ட 32 மாணவிகள் சுகவீனமடைந்துள்ளனர்.
அவர்கள் அம்பியூலன்ஸ் மூலம் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக மாவட்ட அதிகாரிகள் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தவறிழைத்தவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களைப் பார்வையிட அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் வருகை தந்தபோது அங்கே சிறிய அளவிலான பதற்றமான சூழலும் நிலவியதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Latest News
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - சதித்திட்டம் தீட்டியவர்களுக்கு தண்டனை: தடுக்கத் தவறியவர்களுக்கு என்ன?
Local
23 September 2026
IMF உடனான 7ஆவது மீளாய்வு பேச்சுவார்த்தை நிறைவு: இலங்கை பொருளாதார வளர்ச்சி குறித்து சாதகமான மதிப்பீடு!
Local
23 September 2026
இந்தியா – இலங்கை உறவுகள்: இந்திய நாடாளுமன்ற நிலைக்குழுவின் முக்கிய முடிவு
Local
23 September 2026
சாரதி அனுமதிப்பத்திர மருத்துவச் சான்றிதழ்களைப் பெறுவதற்கான புதிய டிஜிட்டல் முறைமை நாளை முதல் அறிமுகம்!
Local
23 September 2026
ரஜினிகாந்த் வீட்டின் முன்புறத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 'பாபா' முத்திரை: ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு!
Local
23 September 2026
சுகீஸ்வர பண்டாரவின் பிணை மனு மீண்டும் நிராகரிப்பு - தொடர்ந்தும் விளக்கமறியலில்!
Local
23 September 2026
இலங்கையின் 5% பணவீக்க இலக்கை தொடருமாறு சர்வதேச நாணய நிதியம் ஆலோசனை
Local
23 September 2026
நாமல் ராஜபக்சவின் வழக்கு இன்று விசாரணைக்கு
Local
23 September 2026
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்: கருத்துக்கணிப்பில் விஜய் அலை இல்லை!
Local
23 September 2026
சட்டவிரோத நிதி நிறுவனங்களின் சொத்துக்கள் முடக்கம்: இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை
Local
23 September 2026