இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 41 ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பையில் நடைபெற்ற குறித்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 243 ஓட்டங்களை குவித்தது.
துடுப்பாட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பில் ரியான் ரிக்கில்டன் 123 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.
இந்தநிலையில் 244 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சார்பில் ட்ரெவிஸ் ஹெட் 76 ஓட்டங்களையும், ஹென்ரிச் கிளாசன் 65 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.
இதற்கமைய குறித்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
ஈரானின் 80% ஏவுகணை நிலையங்கள் அழிப்பு: ட்ரம்ப் வெளியிட்ட அதிரடித் தகவல்!
Local
30 April 2026
ஹைதராபாத் அதிரடி - மும்பைக்கு அதிர்ச்சித் தோல்வி!
Local
30 April 2026
தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி
Local
30 April 2026
புடின் - ட்ரம்ப் இடையே திடீர் கலந்துரையாடல்
Local
29 April 2026
கட்சிப் பொறுப்புகளை துறந்தார் எரான்!
Local
29 April 2026
மராட்டியத்தில் தகிக்கும் வெயில்: வெப்பத்தாக்கத்திற்கு 109 பேர் உயிரிழப்பு - 3 இலட்சம் பேர் சிகிச்சை!
Local
29 April 2026
நாடாளுமன்றத்தின் முழுமையான கணகாய்வு அறிக்கை அடுத்த மாதம் சமர்ப்பிப்பு!
Local
29 April 2026
நாடாளுமன்றக் குழுவைப் புறக்கணிக்கும் திறைசேரி செயலாளர் – ஹர்ஷ டி சில்வா கடும் சாடல்
Local
29 April 2026
பிரபல இசையமைப்பாளர் மீது அத்துமீறல் குற்றச்சாட்டு: பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் பகிரங்க முறைப்பாடு
Local
29 April 2026
லண்டனில் இரு யூதர்கள் மீது கத்திக்குத்து: பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினர் தீவிர விசாரணை
Local
29 April 2026