ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி (Abbas Araghchi) மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோருக்கு இடையே தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது.
ஈரான் - அமெரிக்கா இடையிலான தற்காலிக போர்நிறுத்தம் குறித்த தற்போதைய முன்னேற்றங்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பு சூழல்கள், ஒருங்கிணைந்த செயல்பாடு என்பவை தொடர்பில் இதன்போது பேசப்பட்டுள்ளன.
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் இந்தியாவின் எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 90 சதவீத எரிவாயு இறக்குமதி இந்த வழியாகவே நடைபெறுவதால், இந்தப் பேச்சுவார்த்தை இந்தியாவின் பொருளாதாரப் பாதுகாப்புக்கு மிக முக்கியமானது என்று இந்த உரையாடலின்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதேவேளை அடுத்த மாதம் டெல்லியில் நடைபெறவுள்ள BRICS அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டத்திற்கான ஆயத்தப் பணிகளின் ஒரு பகுதியாகவும் இந்த உரையாடல் பார்க்கப்படுகிறது.
மேற்கு ஆசியாவில் அமைதியை நிலைநாட்டவும், சுதந்திரமான கடல்சார் வர்த்தகத்தை உறுதிப்படுத்தவும் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்துள்ள இந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை இந்தியா வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
டிசம்பரில் நடைபெறுகிறது ஐபிஎல் 2027 ஏலம்: மைதானம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை!
Local
20 September 2026
இரண்டு ஆண்டுகளில் அரசாங்கம் இவற்றையே செய்தது! அமைச்சர் சரோஜா பதில்!
Local
20 September 2026
சர்வதேச சந்தையில் விலை உயர்ந்தாலும் ஒக்டோபரிலும் எரிபொருள் விலைக் கட்டுப்பாடு தொடரும்- ஜனாதிபதி
Local
20 September 2026
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!
Local
20 September 2026
ஐ.நா பொதுச்செயலாளர் போட்டியிலிருந்து மிஷேல் பெச்லெட் விலகினார்!
Local
20 September 2026
அஜித் ரசிகர்கள் சார்பில் புதிய அரசியல் கட்சி தொடக்கம் : பொதுச்செயலாளர் பதவி அஜித்துக்காக ஒதுக்கீடு!
Local
20 September 2026
அட்லீக்கு பதிலடி கொடுத்தாரா விஜய் சேதுபதி? சமூக வலைதளங்களில் வைரலாகிய காணொளி!
Local
20 September 2026
வீதியில் கிடைத்த தங்க நகையைக் காவல்துறையிடம் ஒப்படைத்து உரிமையாளரிடம் சேர்த்த பொகவந்தலாவ இளைஞர்கள்
Local
20 September 2026
"120 நாட்களில் மதிப்பிட முடியாது... ஒரு வருடம் பொறுத்திருங்கள்" : முதலமைச்சர் விஜய்யின் ஆட்சி குறித்து பிரகாஷ் ராஜ் கருத்து!
Local
20 September 2026
குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 20 இலங்கையர்கள் கட்டுநாயக்க வந்தடைந்தனர்
Local
20 September 2026