மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 41-ஆவது லீக் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் தோல்வியைத் தழுவியது.
இது இந்தத் தொடரில் மும்பை அணி சந்திக்கும் 6-ஆவது தோல்வியாகும்.
ரியான் ரிக்கில்டனின் அபாரமான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து மும்பை இந்தியன்ஸ் அணி 243 என்ற இமாலய ஓட்டத்தைக் குவித்தது.
இதனையடுத்து ட்ரெவிஸ் ஹெட் மற்றும் ஹென்ரிச் கிளாசன் ஆகியோரின் அதிரடி அரைசதங்களின் உதவியுடன், 8 பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே இலக்கை எட்டி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.
இந்தநிலையில் 8 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
எனினும், அவர்களது Play Off கனவு இன்னும் முடிந்துவிடவில்லை.
இதன்படி மும்பை அணி மீதமுள்ள 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றால், மொத்தம் 14 போட்டிகளில் 16 புள்ளிகளைப் பெறும்.
ஐபிஎல் வரலாற்றில் 16 புள்ளிகள் என்பது Play Off சுற்றுக்குத் தகுதி பெற போதுமான ஒரு இலக்காகும்.
மீதமுள்ள போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் தோல்வியடைந்து, 14 புள்ளிகளைப் பெற்றால், மற்ற அணிகளின் வெற்றி-தோல்வி முடிவுகள் மற்றும் நிகர ஓட்ட விகிதம் (NRR) ஆகியவற்றின் அடிப்படையிலேயே தகுதி தீர்மானிக்கப்படும்.
இந்தநிலையில் மீதமுள்ள 6 போட்டிகளில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் தோல்வியடைந்தால், மும்பை இந்தியன்ஸ் அணி கணித ரீதியாகத் தொடரிலிருந்து வெளியேற்றப்படும்.
Latest News
உயிருக்குப் போராடும் ஆப்கானிஸ்தான் முன்னாள் வீரர்! இரத்த தானம் செய்ய அவசர வேண்டுகோள்
Local
30 April 2026
ஈரானுக்கும், கனடாவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள கால்பந்து அரசியல் சர்ச்சை!
Local
30 April 2026
இக்கட்டான நிலையில் மும்பை - Play Off செல்ல வாய்ப்புள்ளதா?
Local
30 April 2026
ஈரானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை
Local
30 April 2026
ஈரானின் போர் குறித்த தீர்மானங்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்
Local
30 April 2026
வானூர்தி நிலையத்தில் அவமதிப்பு? FIFA மாநாட்டைப் புறக்கணித்த ஈரான்
Local
30 April 2026
ஈரானின் 80% ஏவுகணை நிலையங்கள் அழிப்பு: ட்ரம்ப் வெளியிட்ட அதிரடித் தகவல்!
Local
30 April 2026
ஹைதராபாத் அதிரடி - மும்பைக்கு அதிர்ச்சித் தோல்வி!
Local
30 April 2026
தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி
Local
30 April 2026
புடின் - ட்ரம்ப் இடையே திடீர் கலந்துரையாடல்
Local
29 April 2026