ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷாபூர் சத்ரான் (Shapoor Zadran), டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
30 வயதான அவருக்கு 'ஏ பொசிட்டிவ்' (A-positive) வகை இரத்தம் அவசரமாகத் தேவைப்படுவதால், அவரது குடும்பத்தினர் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
ஷாபூர் சத்ரான் Hemophagocytic Lymphohistiocytosis (HLH) எனப்படும் மிகவும் அரிதான மற்றும் உயிருக்கு ஆபத்தான நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவர் இந்த நோயின் நான்காம் கட்டத்தில் (Stage 4) உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது நோய் எதிர்ப்புச் சக்தி மிகவும் பலவீனமடைந்துள்ளதோடு, இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையும் பெருமளவு குறைந்துள்ளது.
அண்மையில் அவருக்கு டெங்கு பாதிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஷாபூர் நோய்வாய்ப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் மற்றும் அந்தநாட்டு கிரிக்கெட் சபை (ACB) தலைவர் மிர்வாய்ஸ் அஷ்ரப் ஆகியோரின் உதவியுடன், விசா நடைமுறைகள் விரைவுபடுத்தப்பட்டு ஜனவரி 18 அன்று அவர் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த மார்ச் மாதம் இறுதியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே அவருக்கு நான்காம் கட்ட HLH நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தற்போது வழங்கப்பட்டு வரும் மருந்துகள் ஓரளவுக்குப் பலன் அளிப்பதாக அவரது குடும்பத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Latest News
4 ஆண்டுகளில் இல்லாத உச்சம்! எண்ணெய் விலையில் அதிரடி மாற்றம்
Local
30 April 2026
தவெக ஆட்சியமைக்கும்? Axis My Indiaவின் கருத்துக்கணிப்பினால் எகிறும் எதிர்பார்ப்பு
Local
30 April 2026
எண்ணெய் விலையில் மாற்றம் வருமா? உலக நாடுகள் அதிர்ச்சி
Local
30 April 2026
தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்
Local
30 April 2026
எரான் விக்கிரமரத்னவை கட்சியிலிருந்து விலகுமாறு SJB வலியுறுத்தல்
Local
30 April 2026
நாஸாவின் 365 நாட்களுக்கான செலவை, 40 நாட்களுக்குள் ஈரானில் செலவிட்ட ட்ரம்ப் அரசாங்கம்
Local
30 April 2026
உயிருக்குப் போராடும் ஆப்கானிஸ்தான் முன்னாள் வீரர்! இரத்த தானம் செய்ய அவசர வேண்டுகோள்
Local
30 April 2026
ஈரானுக்கும், கனடாவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள கால்பந்து அரசியல் சர்ச்சை!
Local
30 April 2026
இக்கட்டான நிலையில் மும்பை - Play Off செல்ல வாய்ப்புள்ளதா?
Local
30 April 2026
ஈரானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை
Local
30 April 2026