General30 April 2026

செம்மணியில் தொடரும் அகழ்வுப்பணிகள் - வெளிப்பட்ட ஒரு மனித என்புக்கூடு

யாழ்ப்பாணம் - செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் முன்றாம் கட்ட அகழ்வின் இன்றைய நான்காம் நாளில், ஒரு மனித என்புக்கூடு வெளிப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன், இன்றைய அகழ்வுடன் மொத்தமாக 241 என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன் 240 என்புத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes