International01 May 2026

அமெரிக்காவுக்கு கடும் பதிலடி கொடுக்கப்படும்- எச்சரிக்கும் ஈரான்

அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களை நடத்தினால், நீண்ட மற்றும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.
 
அத்துடன், ஹோர்முஸ் நீரிணை மீதான தனது கட்டுப்பாட்டையும் ஈரான் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இதனால், இந்த நீர்வழியை மீண்டும் திறப்பதற்காக அமெரிக்கா முன்னெடுக்கும் முயற்சிகள் மேலும் சிக்கலாகியுள்ளன.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே இரண்டு மாதங்களாக நடந்து வரும் போரின் காரணமாக, உலகின் 20வீத எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தை உள்ளடக்கிய இந்த முக்கியக் கடல் வழி தொடர்ந்து மூடப்பட்டுள்ளது.

இதனால் சர்வதேச அளவில் எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதுடன், பொருளாதார மந்தநிலை பற்றிய கவலைகளும் அதிகரித்துள்ளன.

இந்தநிலையில், அமெரிக்கா மேலும் தாக்குதல் நடத்தினால், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது நீண்ட மற்றும் வலிமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என ஈரானின் புரட்சிகர காவல் படை எச்சரித்துள்ளது.

இதேவேளை, பாகிஸ்தான் உள்ளிட்ட மத்தியஸ்த நாடுகளின் சமரச முயற்சி மற்றும் போர் நிறுத்த ஒப்பந்தங்கள் இதுவரை ஒரு முழுமையான முடிவுக்கு வரவில்லை.

அதேநேரம்,ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த விவாதத்தை ஒத்திவைக்க ஈரான் முன்வைத்த கோரிக்கையை அமெரிக்கா ஏற்க மறுத்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes