எண்ணெய் சந்தையில் ஏற்பட்ட பெரும் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, ப்ரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் விலை உச்சத்தை எட்டியுள்ளது.
எண்ணெய் முனையமான புஜைரா (Fujairah) துறைமுகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான செய்திகளை அடுத்து, நேற்று மாலை 5:00 மணிக்குப் பிறகு ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று 115 டொலரை கடந்தது.
இது அன்றைய தினத்தில் 5 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியாகும்.
இது ஐக்கிய அரபு இராச்சியத்தின் கிழக்குக் கடற்கரையில், ஹோர்முஸ் நீரிணைக்கு (Strait of Hormuz) அப்பால் அமைந்துள்ளது.
அபுதாபி எண்ணெய் வயல்களில் இருந்து புஜைராவுக்கு குழாய் மூலம் எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது.
இதன் மூலம் ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டாலும், குறிப்பிட்ட அளவு மசகு எண்ணெயை கப்பல்களில் ஏற்றி சர்வதேச சந்தைகளுக்கு அனுப்ப முடிகிறது.
முன்னதாக, ஈரானின் இராணுவம் அமெரிக்காவின் போர்க்கப்பலைத் தாக்கியதாக வந்த செய்திகளைத் தொடர்ந்து, மசகு எண்ணெய் விலை 114 டொலரை எட்டியது.
எனினும், அமெரிக்கக் கப்பல்கள் தாக்கப்படவில்லை என அந்நாடு தெரிவித்ததையடுத்து, மசகு எண்ணெய் விலை மீண்டும் குறைந்தது.
Latest News
இங்கிலாந்து எதிர் இலங்கை: 2 ஆவது இருபதுக்கு 20 போட்டி: 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி!
Local
18 September 2026
சுவீடன் பொதுத்தேர்தல்: இடதுசாரி எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றதை அடுத்து பிரதமர் உல்ஃப் கிறிஸ்ட்சன் பதவி விலகல்!
Local
18 September 2026
தென்னாப்பிரிக்காவில் தொடரும் கொடூரம்: ஜொஹன்னஸ்பர்க் புறநகரில் 9 ஆவது பெண்ணின் உடலம் மீட்பு!
Local
18 September 2026
பிரித்தானியப் படையினரால், எத்தியோப்பியாவில் சூறையாடப்பட்ட பழங்கால கோண்டாரை சுவிசேஷம்!
Local
18 September 2026
அமெரிக்க வட்டி உயர்வு கேலிக்குரியது: டெய்லர் சமன்பாட்டை மாற்றி அமைத்து ஈரான் சபாநாயகர் கிண்டல்!
Local
18 September 2026
ஈரானில் பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின்னால் அமெரிக்கா: ஐ.நா. போர்க் குற்றம் எனச் சாடல்!
Local
18 September 2026
இலங்கை எதிர் இங்கிலாந்து 2 ஆவது இருபதுக்கு 20 போட்டி : இங்கிலாந்துக்கு 146 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!
Local
18 September 2026
இங்கிலாந்து எதிர் இலங்கை இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி: இங்கிலாந்து அணி களத்தடுப்பு தேர்வு!
Local
17 September 2026
ஒன்லைன் மூலம் தொடருந்து பயணச்சீட்டுகளைப் பெறும் வசதி அறிமுகம்
Local
17 September 2026
மாலபே பகுதியில் துப்பாக்கி ரவைகள், கைவிலங்கு மீட்பு
Local
17 September 2026