தமிழகத்தின் 16ஆவது சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, தமிழக சட்டமன்றம் கலைக்கப்படுவதாக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் அறிவித்துள்ளார்.
அரசியல் சாசன முறைப்படி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சட்டமன்றத்தின் பதவிக்காலம் நிறைவடைகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், மாநிலத்தில் ஆட்சியமைக்க ஆளுநரிடம் முறைப்படி உரிமை கோரியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4ஆம் திகதி எண்ணப்பட்டன. தேர்தல் முடிவுகளின்படி தவெக 108 இடங்களையும், திமுக கூட்டணி 73 இடங்களையும், அதிமுக கூட்டணி 53 இடங்களையும் கைப்பற்றின.
தவெகவுக்கு ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில், காங்கிரஸ் கட்சியின் 5 சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஆதரவு கடிதம் இன்று தவெக தலைவர் விஜய்யிடம் வழங்கப்பட்டது.
ஆதரவு கடிதத்துடன் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்ற தவெக தலைவர் விஜய், பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரும் கடிதத்தை வழங்கினார்.
தமிழகத்தின் 16-வது சட்டமன்றத்தில் தி.மு.க. அரசு ஆட்சியமைத்த நிலையில், அதன் பதவிக்காலம் தற்போது நிறைவடைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் தலைமையில் 17ஆவது சட்டமன்றம் உருவாக்கப்பட்டு புதிய அரசு அமைக்கப்படவுள்ளது.

Latest News
வியட்நாம் ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்
Local
06 May 2026
கணினி தொடர்பான குற்றச் செயல்களில் ஈடுபட்ட வியட்நாம் நாட்டவர்கள் உட்பட 60 பேர் கைது!
Local
06 May 2026
சட்டவிரோத உந்துருளி வழக்கு - ஹம்பாந்தோட்டை பறவைகள் பூங்கா உரிமையாளர் விடுதலை!
Local
06 May 2026
புத்தளத்தில் அதிரடி: 618 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கைது!
Local
06 May 2026
அமெரிக்காவின் தீர்மானத்தை நிராகரிக்க ஐ.நா.உறுப்பு நாடுகளுக்கு ஈரான் அழைப்பு!
Local
06 May 2026
மலையக மக்களின் காணி உரிமையை தாரைவார்த்தால் போராட்டம் வெடிக்கும்!" - நாடாளுமன்றில் மனோ கணேசன் எச்சரிக்கை
Local
06 May 2026
பொதுவெளியில் சிறுநீர் கழிப்பவர்களைத் தடுக்க 'கண்ணாடி' வைத்த மாநகராட்சி!
Local
06 May 2026
தமிழக சட்டமன்றம் கலைப்பு
Local
06 May 2026
தமிழ்நாட்டின் புதிய அத்தியாயம் - விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க!
Local
06 May 2026
லாஃப்ஸ் வீட்டு சமையல் எரிவாயு விலை அதிரடியாக உயர்வு
Local
06 May 2026