பொது இடங்களில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க மைசூர் மாநகராட்சி ஒரு வினோதமான மற்றும் புத்திசாலித்தனமான முயற்சியைக் கையில் எடுத்துள்ளது.
மைசூர் நகரின் முக்கிய சாலை ஓரங்களில், நீண்ட காலமாக பொதுமக்களால் சிறுநீர் கழிக்க பயன்படுத்தப்பட்டு வந்த சுவர்களைத் தேர்வு செய்த மாநகராட்சி, அங்கு பெரிய அளவிலான கண்ணாடித் தடுப்புகளை (Mirrors) நிறுவியுள்ளது.
பொதுவாகச் சுவர்களில் எச்சில் துப்புவதையோ அல்லது சிறுநீர் கழிப்பதையோ தடுப்பதற்கு கடவுள் படங்கள் அல்லது எச்சரிக்கை பலகைகள் வைப்பது வழக்கம். ஆனால், அதையும் மீறி அசுத்தம் செய்பவர்களைத் தடுக்கவே இந்த 'கண்ணாடி' உத்தியை மாநகராட்சி பயன்படுத்தியுள்ளது.
பொதுவெளியில் இச்செயலைச் செய்யும்போது கண்ணாடி வழியாகத் தங்களையே பார்ப்பது அவர்களுக்கு ஒருவித கூச்சத்தையும், தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தும். இது அவர்களை அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்லத் தூண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் நம்புகின்றனர்.
"தண்டனைகள் மற்றும் அபராதங்களை விட, ஒருவரின் சுய ஒழுக்கத்தைத் தூண்டும் இத்தகைய முயற்சிகள் அதிக பலன் தரும்," எனச் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். மாநகராட்சியின் இந்த வினோத நடவடிக்கை தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
Latest News
வியட்நாம் ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்
Local
06 May 2026
கணினி தொடர்பான குற்றச் செயல்களில் ஈடுபட்ட வியட்நாம் நாட்டவர்கள் உட்பட 60 பேர் கைது!
Local
06 May 2026
சட்டவிரோத உந்துருளி வழக்கு - ஹம்பாந்தோட்டை பறவைகள் பூங்கா உரிமையாளர் விடுதலை!
Local
06 May 2026
புத்தளத்தில் அதிரடி: 618 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கைது!
Local
06 May 2026
அமெரிக்காவின் தீர்மானத்தை நிராகரிக்க ஐ.நா.உறுப்பு நாடுகளுக்கு ஈரான் அழைப்பு!
Local
06 May 2026
மலையக மக்களின் காணி உரிமையை தாரைவார்த்தால் போராட்டம் வெடிக்கும்!" - நாடாளுமன்றில் மனோ கணேசன் எச்சரிக்கை
Local
06 May 2026
பொதுவெளியில் சிறுநீர் கழிப்பவர்களைத் தடுக்க 'கண்ணாடி' வைத்த மாநகராட்சி!
Local
06 May 2026
தமிழக சட்டமன்றம் கலைப்பு
Local
06 May 2026
தமிழ்நாட்டின் புதிய அத்தியாயம் - விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க!
Local
06 May 2026
லாஃப்ஸ் வீட்டு சமையல் எரிவாயு விலை அதிரடியாக உயர்வு
Local
06 May 2026