தமிழக வெற்றிக் கழகம்ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், ஆளுநர் ஆர்லேகர் இதுவரை அதற்கு அனுமதி வழங்காமை குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களை மக்கள் தவெகவுக்கு வழங்கியுள்ளனர்.
எனவே, அதன் தலைவர் விஜயைப் பதவியேற்க ஆளுநர் அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவித்த திருமாவளவன், ஆளுநர் இன்னும் முடிவெடுக்காமல் காலதாமதம் செய்வது அரசியல் குழப்பங்களுக்கே வழிவகுக்கும் என எச்சரித்தார்.
ஆளுநர் மாளிகையிலேயே 118 உறுப்பினர்களின் பட்டியலைச் சமர்ப்பிக்க வேண்டும் என ஆளுநர் நிபந்தனை விதிக்க முடியாது எனத் தெரிவித்த திருமாவளவன், "விஜய்க்கு பெரும்பான்மை பலம் இருக்கிறதா என்பதைச் சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும். அதற்கு ஆளுநர் இடமளிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.
தவெகவுடன் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்து விசிகவின் நிலைப்பாடு பற்றிக் கருத்து வெளியிட்ட அவர், "எங்களுடன் இணைந்து தவெக ஆட்சி அமைக்க விரும்புவதை நாங்கள் பரிசீலித்து வருகிறோம்" எனத் தெரிவித்துள்ளார். இது தமிழக அரசியலில் ஒரு புதிய கூட்டணி அரசாங்கத்திற்கான வாய்ப்பை கோடிட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளது.
இதனிடையே, தவெக தலைவர் விஜய் மீண்டும் ஆளுநர் சந்திக்க சென்றுள்ள நிலையில், தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது தொடர்பான இழுபறி நிலை தொடர்ந்து நீடிக்கிறது.
Latest News
இரண்டு ஆண்டுகளின் பின் டொலரின் பெறுமதி 324 ரூபாயைக் கடந்தது: இலங்கையின் வெளிநாட்டு இருப்புக்கு பாரிய அச்சுறுத்தல்
Local
07 May 2026
தவெகவை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும்: ஆளுநருக்கு தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் எச்சரிக்கை!
Local
07 May 2026
கல்முனை - சாய்ந்தமருது விவகாரத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு: ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர்
Local
07 May 2026
விஜய்யைப் பதவியேற்க அனுமதிப்பதே ஜனநாயகம் – ஆளுநரின் நடவடிக்கைக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்
Local
07 May 2026
தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவா? : விசிக, இடதுசாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
Local
07 May 2026
118 உறுப்பினர்களின் ஆதரவின்றிப் பதவியேற்பு இல்லை: விஜய்க்கு ஆளுநர் திட்டவட்டமான பதில்
Local
07 May 2026
'ஒபரேஷன் சிந்தூர்' ஓராண்டு நிறைவு - சமூக ஊடகங்களின் முகப்பு படங்களை மாற்றி பிரதமர் மோடி பெருமிதம்!
Local
07 May 2026
வாகன இலக்கத்தகடுகள் தொடர்பில் வெளியான அறிவித்தல்
Local
07 May 2026
பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் அதிகரிப்பு : தீர்வு காண சர்வதேச உதவியை நாடுகிறது இலங்கை!
Local
07 May 2026
பெரும்பான்மையை பேரவையில்தான் நிரூபிக்க வேண்டும், ராஜ்பவனில் அல்ல - கமல்ஹாசன்
Local
07 May 2026