உலகளவில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதற்கு மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வது மட்டுமே காரணம் அல்ல என்றும், ஐபோன் உள்ளிட்ட நவீன தொலைப்பேசிகளின் அதீத பயன்பாடே இதற்கு முக்கியக் காரணம் என்றும் இரண்டு புதிய ஆய்வுகள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் தேசிய பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம் (NBER) நடத்திய ஆய்வில், 2007 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் ஐபோன் பயன்பாடு எந்தெந்தப் பகுதிகளில் அதிகரித்ததோ, அங்கெல்லாம் பிறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் (INDIA TODEY) செய்தி வெளியிட்டுள்ளன.
பாலியல் செயல்பாடுகள் குறைவு; இணையப் பழக்கம் அதிகரிப்பு
நவீன தொலைப்பேசிகளின் வரவு காரணமாக இளைஞர்கள் நேரில் சந்தித்துப் பேசுவது 44 சதவீதத்தால் குறைந்துள்ளதோடு, தம்பதிகளுக்கு இடையிலான பாலியல் செயல்பாடுகளும் குறைந்துள்ளன.
அதற்கு மாற்றாக இணையதளங்களில் நேரத்தைச் செலவிடும் பழக்கம் இரட்டிப்பாகியுள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதற்கு மாற்றாக இணையதளங்களில் நேரத்தைச் செலவிடும் பழக்கம் இரட்டிப்பாகியுள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதோடு, தேவையற்ற கர்ப்பத்தைத் தவிர்ப்பதற்கான விழிப்புணர்வும், நவீன கருத்தடை முறைகள் பற்றிய தகவல்களும் நவீன தொலைப்பேசிகள் மூலம் எளிதாகக் கிடைத்ததும் பிறப்பு விகிதச் சரிவுக்கு மற்றொரு காரணமாகக் கூறப்பகின்றது.
128 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு
இதேவேளை, சின்சினாட்டி பல்கலைக்கழக (University of Cincinnati) பொருளாதார வல்லுநர்கள் 128 நாடுகளில் நடத்திய மற்றொரு ஆய்விலும் இத்தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கலாச்சாரம் மற்றும் பொருளாதார நிலைகள் வேறுபட்டிருந்தாலும், நவீன தொலைப்பேசி மற்றும் அதிவேக இணையப் பயன்பாடு அதிகரித்த அனைத்து நாடுகளிலும் ஒரே காலகட்டத்தில் பிறப்பு விகிதம் வேகமாகச் சரிவடைந்துள்ளது.
கலாச்சாரம் மற்றும் பொருளாதார நிலைகள் வேறுபட்டிருந்தாலும், நவீன தொலைப்பேசி மற்றும் அதிவேக இணையப் பயன்பாடு அதிகரித்த அனைத்து நாடுகளிலும் ஒரே காலகட்டத்தில் பிறப்பு விகிதம் வேகமாகச் சரிவடைந்துள்ளது.
மேலும் அமெரிக்கா, கனடா போன்ற வளர்ந்த நாடுகள் மட்டுமன்றி, இந்தியா மற்றும் இலங்கை போன்ற நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளிலும் இந்த தொழில்நுட்பத் தாக்கத்தால் பிறப்பு விகிதம் மிக வேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Latest News
டிஜிட்டல் அடையாள அட்டை மோசடி - ஆட்பதிவுத் திணைக்களம் எச்சரிக்கை!
Local
10 June 2026
அதிகரிக்கும் டெங்கு அச்சுறுத்தல் - இரு நாட்களில் 4,000 நுளம்புப் பெருக்க இடங்கள் அடையாளம்
Local
10 June 2026
கடந்த 6 ஆண்டுகளில் 2 இலட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து விலகல் - நாடாளுமன்றத்தில் பிரதமர் தகவல்!
Local
10 June 2026
காஷ்மீரில் பாகிஸ்தான் இராணுவ உலங்கு வானூர்தி விபத்து - பயணித்த அனைத்து இராணுவப்படை உறுப்பினர்களும் உயிரிழப்பு
Local
10 June 2026
உடற்பிடிப்பு நிலையம் என்ற போர்வையில் இயங்கிய இரு பாலியல் தொழில் விடுதிகள் முற்றுகை: முகாமையாளர் மற்றும் 12 பெண்கள் கைது
Local
10 June 2026
பதுளை கிளன் அல்பின் தோட்டத்தில் தீப்பரவல் - இரு வீடுகள் முழுமையாகச் சேதம்
Local
10 June 2026
முச்சக்கரவண்டி ஒன்று தொடருந்துடன் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு
Local
10 June 2026
அரசாங்கத்தின் கீழ் உள்ள தோட்டங்கள் மற்றும் தொழிலாளர்களின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் வெளியீடு
Local
10 June 2026
முதலிடத்திற்கு முன்னேறிய ஹரி புரூக் - ஐசிசி தரவரிசையில் அதிரடி மாற்றம்!
Local
10 June 2026
2030ஆம் ஆண்டிற்குள் 70% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி - நாடாளுமன்றத்தில் பிரதமர் உறுதி
Local
10 June 2026