தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா காலமானார்.
கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் திரையுலகில் கிராமிய வாழ்க்கை முறையையும், மண்ணின் மணத்தையும், மக்களின் உணர்வுகளையும் இயல்பாக திரையில் பதிவு செய்து புதிய பாதையை உருவாக்கிய பெருமை பாரதிராஜாவையே சாரும். 1977 ஆம் ஆண்டு வெளியான '16 வயதினிலே' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், அதன் பின்னர் 'கிழக்கே போகும் ரயில்', 'புதிய வார்ப்புகள்', 'அலைகள் ஓய்வதில்லை', 'முதல் மரியாதை' உள்ளிட்ட பல காலத்தால் அழியாத படைப்புகளை தமிழ் சினிமாவிற்கு வழங்கினார்.
சினிமாவின் எல்லைகளைத் தாண்டி, யதார்த்த வாழ்க்கையையும் மனித உணர்வுகளையும் திரையில் உயிர்ப்பித்த இயக்குநராக அவர் போற்றப்பட்டார். தனது தனித்துவமான படைப்புகளுக்காக தேசிய விருதுகள் உட்பட பல உயரிய விருதுகளை வென்றுள்ளார்.
இயக்குநராக மட்டுமன்றி, பல திரைப்படங்களில் தனது இயல்பான நடிப்பின் மூலம் சிறந்த நடிகராகவும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.
அவரது ஒரே மகனும் நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜாவின் மறைவு, பாரதிராஜாவை ஆழமாகப் பாதித்திருந்ததாக நெருங்கிய தரப்புக்கள் தெரிவித்திருந்தன.
பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரையுலகிற்கும், உலகெங்கிலும் உள்ள தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகக் கருதப்படுகிறது. அவரது மறைவுக்கு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள், கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
Latest News
*சுரேஷ் சலே விவகாரம்: மருத்துவ அறிக்கையை கோரும் உத்தரவு இன்று* பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி சுரேஷ் சலேவை, விசேட மருத்துவ நிபுணர் குழுவின் முன்பாக முன்னிலைப்படுத்தி அறிக்கை ஒன்றைப் பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவிடுமாறு சட்டமா அதிபர் விடுத்த கோரிக்கை மீதான கட்டளை இன்று வழங்கப்படவுள்ளது. முன்னதாக, சுரேஷ் சலே சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவொன்று கடந்த ஜூன் மாதம் 04ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, நீதிமன்றம் இந்த விடயத்தை ஆராய்ந்தது. அன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையான மேலதிக மன்றாடியர் நாயகம் திலீப பீரிஸ் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான் நீதிமன்றம், இது தொடர்பான கட்டளையை இன்றைய தினத்திற்கு ஒத்திவைத்திருந்தது.
Local
10 June 2026
தொடருந்து பாதுகாப்பு அதிகாரிகள் சங்கத்தால் திட்டமிடப்பட்டிருந்த பணிப்புறக்கணிப்பு ஒத்திவைப்பு
Local
10 June 2026
தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் திடீர் வீழ்ச்சி : பின்னணி என்ன?
Local
10 June 2026
'இயக்குநர் இமயம்' பாரதிராஜா காலமானார்!
Local
10 June 2026
சங்கீத்ஷனை உடனடியாக விடுவிக்க வேண்டும்; இல்லையேல் வடகிழக்கில் பாரிய போராட்டம் வெடிக்கும்: நாடாளுமன்றத்தில் சிறீதரன் எச்சரிக்கை
Local
10 June 2026
பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயம் : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்!
Local
10 June 2026
போக்குவரத்து விதிகளில் வரப்போகும் பாரிய மாற்றம்!
Local
10 June 2026
ஈரான் மீது அதிரடித் தாக்குதலைத் தொடங்கியது அமெரிக்கா!
Local
10 June 2026
கோட்டாபய உள்ளிட்டோருக்கு பயணத்தடை விதிக்கப்பட்டதன் பின்னரே இரைச்சல் அதிகரித்துள்ளது - நளிந்த ஜயதிஸ்ஸ
Local
10 June 2026
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறத் திட்டமிடுகிறாரா பென் ஸ்டோக்ஸ்?
Local
10 June 2026