மறைந்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
சென்னையின் நீலாங்கரையில் அமைந்துள்ள பாரதிராஜாவின் இல்லத்திற்குச் சென்ற முதலமைச்சர், அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதுடன், குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.
தமிழ் திரையுலகின் முக்கிய படைப்பாளிகளில் ஒருவராக விளங்கிய பாரதிராஜா, உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று தனது 84ஆவது வயதில் காலமானார். அவரது மறைவு திரைத்துறையினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், நடிகையும் அரசியல் பிரமுகருமான குஷ்பு தனது இரங்கல் செய்தியில்,
“அனைவராலும் மிகவும் நேசிக்கப்பட்ட, பலராலும் மதிக்கப்பட்ட மாபெரும் இயக்குநரை இந்திய திரையுலகம் இழந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல், நடிகை ரேவதியும் பாரதிராஜாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளதுடன், அவரது படைப்புகள் என்றும் ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
கிராமிய வாழ்வியலை திரையில் உயிர்ப்பித்த இயக்குநராக போற்றப்படும் பாரதிராஜா, ‘16 வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘முதல் மரியாதை’ உள்ளிட்ட பல மறக்க முடியாத திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனித்துவமான இடத்தைப் பெற்றவர்.
பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரையுலகிற்கும், உலகெங்கிலும் உள்ள தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகக் கருதப்படுகிறது.
அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர், கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
Latest News
இந்திய வானூர்திப்படைக்கு சொந்தமான வானூர்தி விபத்து
Local
13 June 2026
நாட்டை மீண்டும் எங்களிடம் தாருங்கள், நடத்தி காண்பிப்போம் - மஹிந்த ராஜபக்ச சவால்!
Local
13 June 2026
பழங்குடியினரின் தலைவருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!
Local
13 June 2026
ஐந்து வயது மாணவியிடம் அத்துமீறியவர் கைது
Local
13 June 2026
களனிமுல்லையில் திருடப்பட்ட கொள்கலன் பாரவூர்தி அம்புல்கமவில் மீட்பு!
Local
13 June 2026
உலக வரலாற்றில் முதல் ட்ரில்லியனரானார் ஈலோன் மஸ்க்
Local
13 June 2026
சலேவைப் பார்க்க மனைவி இன்றும் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு: உணவுத் தவிர்ப்புப் போராட்டம் தொடர்கிறது!
Local
13 June 2026
நாட்டில் வேகமாக அதிகரிக்கும் டெங்கு: கொள்ளளவை மீறும் மருத்துவமனைகள்
Local
13 June 2026
குலம் சார்ந்த அரசியல் இன்றி சுரேஷ் சலேவுக்கு நீதியை நிலைநாட்டுங்கள்: முன்னாள் அமைச்சர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்
Local
13 June 2026
"அரசாங்கத்தின் தோல்விகளை மறைக்க ஊடக அடக்குமுறை!" அரசாங்கம் தோல்வியை மறைக்க ஊடகங்களை அடக்குமுறைக்கு உட்படுத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார். நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டில் 35,000-ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்காலிக தங்குமிடங்களிலும், வாடகை வீடுகளிலும், கூடாரங்களிலும் மிகவும் அவலமான நிலையில் வாழ்ந்து வருகின்றனர். கடந்த காலங்களில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கு, நிலையான வீடுகளை அமைத்துக் கொடுக்க அரசாங்கம் இதுவரை எவ்வித முறையான திட்டங்களையும் நடைமுறைப்படுத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கம் தனது நிர்வாகத் தோல்விகளையும், பொய்களையும் மூடிமறைப்பதற்காக ஊடகங்களையும், மாற்றுக்கருத்துடையவர்களையும் ஒடுக்கும் அரசியல் ரீதியான அடக்குமுறைகளை கையாண்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கத்தின் தவறான நிர்வாகம் மற்றும் ஊழல்களின் சுமையை பொதுமக்கள் மீதே அரசாங்கம் சுமத்தி வருகின்றது. நாளுக்கு நாள் எரிபொருள் விலை மற்றும் வரிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. நாடாளுமன்றக் குழு கூட்டங்களின் போது அரசாங்கத்தின் நிதி முறைகேடுகள் அம்பலமாகின்ற போதிலும், அதற்கான தீர்வாக பொதுமக்கள் மீதே மேலும் வரிச்சுமைகள் சுமத்தப்படுவதாக அவர் விசனம் தெரிவித்துள்ளார். உலகளாவிய ரீதியில் உணவுத் தட்டுப்பாடு மற்றும் காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டு வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில், உள்நாட்டு விவசாயிகளையும், உற்பத்தியாளர்களையும் வலுப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளது. புதிய முதலீடுகளை ஈர்க்கவோ அல்லது புதிய தொழிற்சாலைகளை உருவாக்கவோ முடியாத நிலையில் தற்போதைய நிர்வாகம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத்தின் இத்தகைய திட்டமிடப்படாத, தன்னிச்சையான அரசியல் செயல்பாடுகளினால் நாட்டின் எதிர்காலம் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பெரும் கேள்விக்குறியாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Local
13 June 2026