General10 June 2026

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் மகளிர் அணி

பாகிஸ்தான் தேசிய மகளிர் கிரிக்கெட் அணி, எதிர்வரும் ஜூலை மற்றும் ஒகஸ்ட் மாதங்களில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் (ODI) மற்றும் T20I போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சுற்றுப்பயணத்தில் மூன்று ஒருநாள் போட்டிகளும், மூன்று இருபதுக்கு 20 போட்டிகளும் இடம்பெறவுள்ளன.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது, 'ஐசிசி மகளிர் செம்பியன்ஷிப் 2025–2029' (ICC Women’s Championship 2025–2029) சுற்றின் ஒரு பகுதியாக அமையும் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

இந்த தொடருக்கான அனைத்துப் போட்டிகளும் ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளன.

மேலதிக முழுமையான விடயம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes