"நாங்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவோம், அதுவும் மிகக் கடுமையான தாக்குதலை நடத்துவோம்" என அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு நீண்ட காலம் எடுத்துக்கொள்வதற்காக ஈரான் "விலை கொடுக்க வேண்டியிருக்கும்" என்று தான் முன்னர் கூறிய கருத்தை தெளிவுபடுத்துமாறு ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்கள் கேட்டபோது, ட்ரம்ப் இந்த பதிலை வழங்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா மீண்டும் தனது குண்டுவீச்சுத் தாக்குதல்களை ஆரம்பிக்கும் என்பதை இது குறிக்கிறதா என்று அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், "ஆம், உலங்கு வானூர்தி சம்பவத்தின் அடிப்படையில், அவ்வாறு செய்வதற்கு நமக்கு உரிமை உண்டு என்றே நான் கருதுகிறேன்" என்று கூறினார்.
ஹோர்முஸ் நீரிணைக்கு (Strait of Hormuz) மேலாக அமெரிக்காவின் அபாச்சி (Apache) ரக உலங்கு வானூர்தி ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
இதேவேளை, ஈரான் மீது தனது நிர்வாகம் "மிகக் கடுமையான" தாக்குதல்களை நடத்தும் என்று எச்சரித்ததைத் தொடர்ந்து, ஈரான் தலைவர்கள் இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
"அவர்கள் இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டும், இது ஒரு நல்ல உடன்படிக்கை" என்று செய்தியாளர்களிடம் தெரிவித்த ட்ரம்ப், தற்போது முன்வைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் ஈரான் "ஒருபோதும் அணு ஆயுதத்தை உருவாக்குவதைத்" தடுக்கும் என்றும் குறிப்பிட்டார்.
"நாங்கள் ஓர் அர்த்தமுள்ள, நடைமுறைக்கு சாத்தியமான உடன்படிக்கையையே விரும்புகிறோம்."
"என்ன நடக்கிறது என்று பார்ப்போம். நேற்று அவர்கள் மீது நாம் கடுமையான தாக்குதலை நடத்தினோம், இன்றும் அவர்கள் மீது கடுமையான தாக்குதலைத் தொடுப்போம்... உடன்படிக்கைக்கு என்ன நடக்கிறது என்பதையும் பார்ப்போம். நாம் உடன்படிக்கைக்கு மிக நெருக்கமாக இருந்தோம், ஆனால் அவர்கள் நம்மை ஏமாற்றிக்கொண்டே இருக்கிறார்கள், நம்மை ஏமாளிகளாக விளையாடுகிறார்கள்" என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Latest News
விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்
Local
11 June 2026
பெசில் ராஜபக்ஷவுக்கு நீதிமன்றம் கொடுத்த 'அதிர்ச்சி' வைத்தியம்!
Local
11 June 2026
ட்ரம்ப்பின் தாக்குதல் எச்சரிக்கைக்கு ஈரான் ஜனாதிபதி பதிலடி!
Local
11 June 2026
காலிமுகத்திடல் கடலில் அடித்துச் செல்லப்பட்டு மீட்கப்பட்ட சிறுவர்களில் ஒருவர் உயிரிழப்பு
Local
10 June 2026
‘மிகக் கடுமையான தாக்குதல் நடத்துவோம்’: ஈரானுக்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை
Local
10 June 2026
டிஜிட்டல் அடையாள அட்டை மோசடி - ஆட்பதிவுத் திணைக்களம் எச்சரிக்கை!
Local
10 June 2026
அதிகரிக்கும் டெங்கு அச்சுறுத்தல் - இரு நாட்களில் 4,000 நுளம்புப் பெருக்க இடங்கள் அடையாளம்
Local
10 June 2026
கடந்த 6 ஆண்டுகளில் 2 இலட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து விலகல் - நாடாளுமன்றத்தில் பிரதமர் தகவல்!
Local
10 June 2026
காஷ்மீரில் பாகிஸ்தான் இராணுவ உலங்கு வானூர்தி விபத்து - பயணித்த அனைத்து இராணுவப்படை உறுப்பினர்களும் உயிரிழப்பு
Local
10 June 2026
உடற்பிடிப்பு நிலையம் என்ற போர்வையில் இயங்கிய இரு பாலியல் தொழில் விடுதிகள் முற்றுகை: முகாமையாளர் மற்றும் 12 பெண்கள் கைது
Local
10 June 2026