General11 June 2026

வங்கி தவறால் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவு இருமுறை வைப்பு

சீத்தவாகபுர காவல்துறை பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கு மே மாதத்திற்காக வழங்கப்பட வேண்டிய உணவு மற்றும் தங்குமிடக் கொடுப்பனவுகள், வங்கித் தவறுதல் காரணமாக இருமுறை கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வங்கியூடாக இந்தக் கொடுப்பனவுகளை உத்தியோகத்தர்களின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பும் போதே இந்தத் தவறு நேர்ந்துள்ளது.

இதனையடுத்து, சீதாவகபுர காவல்துறை பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர், சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு எழுத்துப்பூர்வமான அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார். அதில், தமக்குரிய ஒரு மாதக் கொடுப்பனவை மாத்திரம் கணக்கிலிருந்து பெற்றுக் கொள்ளுமாறும், மேலதிகமாக வந்துள்ள தொகையை கணக்கிலேயே வைத்திருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

இவ்வாறு கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ள மேலதிகத் தொகையானது, வங்கியினால் மீண்டும் அறவிடப்படும் என்றும் அந்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes