International12 June 2026

அமெரிக்காவின் இரட்டை வேடத்தை உலகிற்குத் தோலுரித்துக் காட்டிய ஈரான்!

அமெரிக்காவுடனான சாத்தியமான உடன்படிக்கை குறித்து ஈரான் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்றும், பேச்சுவார்த்தைகளில் தனது "சிவப்பு கோடுகளை" (Red Lines) ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் இந்தத் தகவலை வௌியிட்டுள்ளது.

உடன்படிக்கை கையெழுத்தாகும் நேரம் மற்றும் இடம் குறித்து வௌியாகும் தகவல்கள் யாவும் வெறும் ஊகங்கள் மட்டுமே என்றும், இதுவரை எதுவும் இறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இருதரப்பு பேச்சுவார்த்தை உரையின் பெரும்பகுதி ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுவிட்ட போதிலும், பேச்சுவார்த்தையின் போது அமெரிக்கா தனது நிலைப்பாடுகளைத் தொடர்ந்து பலமுறை மாற்றிக் கொண்டதே தற்போதைய இழுபறிக்கு முக்கிய காரணம் என்று இஸ்மாயில் பாகேய் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுடனான போர் நிறுத்தம் மற்றும் உடன்படிக்கை குறித்துப் பேசி வரும் நிலையில், ஈரான் தரப்பிலிருந்து இந்த அதிகாரப்பூர்வ மறுப்பு வௌியாகியுள்ளது என ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes