General16 June 2026

நீர் விநியோகத்தடை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

கம்பஹா மாவட்டத்தில் பல பகுதிகளுக்கு 19 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அத்தனகல்ல மற்றும் கரஸ்நாகல ஆகிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர பராமரிப்புப் பணிகள் காரணமாகவே இந்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி இன்று (16) காலை 8.00 மணி முதல் நாளை (17) காலை 3.00 மணி வரை இந்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மினுவாங்கொடை, கம்பஹா, மஹர, அத்தனகல்ல மற்றும் நிட்டம்புவ ஆகிய பிரதேசங்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளான அஸ்கிரிய, உடுகம்பொல, ஓபாத, வெலிவேரிய, பலும்மஹர மற்றும் ரதுபஸ்வல ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும்.

மேலும், கம்பஹா மாநகர சபை மற்றும் பிரதேச சபை அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் நீர் விநியோகத் தடை ஏற்படவுள்ளது.
குறித்த காலப்பகுதியில் நீர் விநியோகத் தடையினால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருந்துவதாகத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes