தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த போது, அரச புலனாய்வுச் சேவை (SIS) முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் முறைப்பாடு குறித்து தாங்கள் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த விசாரணை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளிடம் இன்றைய தினமும் (16) வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி.புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.
சுரேஷ் சலே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டிருந்த போது, அவர் முறையற்ற நடத்தைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறி அவரது உறவினர்களால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கூடத்தை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் விசேட சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதன்போது, அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சாதாரண சிறைக்கூடமொன்றிலேயே தடுத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளதுடன், அங்கு போதிய காற்றோட்டம் இல்லாமை உள்ளிட்ட பல அடிப்படை குறைபாடுகளும் அவதானிக்கப்பட்டுள்ளன.
இந்த சோதனையின் போது கண்டறியப்பட்ட குறைபாடுகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு ஆணைக்குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கூடத்துக்கு அருகில் உள்ள மற்றுமொரு சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏனைய கைதிகள் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடமிருந்தும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த விசாரணை நடவடிக்கைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களப் பணியாளர்களிடம் இருந்து மேலும் பல வாக்குமூலங்களைப் பெற எதிர்பார்ப்பதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சுரேஷ் சலேவுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்தும் தாங்கள் கண்காணித்து வருவதாக மனித உரிமைகள் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Latest News
கைதாவதை தடுக்க கோரி கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றில் மனு
Local
16 June 2026
யூடியூப்பில் 500 மில்லியன் சந்தாதாரர்களைப் பெற்று மிஸ்டர் பீஸ்ட் உலக சாதனை!
Local
16 June 2026
கனடாவில் தீவிரமடையும் வைரஸ் பரவல் : அமெரிக்கா விடுத்துள்ள அவசர பயண எச்சரிக்கை!
Local
16 June 2026
அரசாங்க திறைசேரி மகாவலி கங்கையைப் போல் நிரம்பி வழிகிறது என்றால் பணம் எங்கே?
Local
16 June 2026
சுரேஷ் சலே சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டாரா? மனித உரிமைகள் ஆணைக்குழு தொடர்ந்து விசாரணை!
Local
16 June 2026
காலி முதல் பொத்துவில் வரையான கடற்பகுதியில் காற்றின் வேகம் அதிகரிக்கும்: கடற்றொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!
Local
16 June 2026
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் நிலநடுக்கம்
Local
16 June 2026
இந்தியாவில் ஜூன் 22 வரை டெலிகிராம் செயலிக்குத் தடை: கல்வி அமைச்சு
Local
16 June 2026
338 ரூபாவைத் தாண்டியது அமெரிக்க டொலரின் விற்பனை விலை!
Local
16 June 2026
இலங்கையில் இன்று தங்கவிலை அதிகரிப்பு
Local
16 June 2026