வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கையின் போது இலங்கை இராணுவத்தினரால் அந்தப் பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட, 161 இலட்சம் ரூபாய் பெறுமதியான பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தங்க ஆபரணங்களின் அளவீட்டுப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) இன்று (16) கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் அறிவித்துள்ளது.
இந்தத் தங்க ஆபரணத் தொகுதி தற்போது இலங்கை மத்திய வங்கியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
பத்தாயிரத்திற்கும் அதிகமான இந்தத் தங்க ஆபரணங்களை அளவீடு செய்து முடிப்பதற்குச் சுமார் ஒரு வருட காலம் எடுத்ததாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, குறித்த தங்க ஆபரணங்கள் தொடர்பான விரிவான அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதவான், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு இதன்போது உத்தரவிட்டார்.
விடுதலைப்புலிகள் முகாம்கள், சட்டவிரோத வங்கிகள் உள்ளிட்ட கட்டடங்களிலிருந்து மீட்கப்பட்டு, தற்போது இராணுவப் புலனாய்வுப் பணிப்பகத்தின் பொறுப்பில் உள்ள இந்தத் தங்க ஆபரணங்களை, தேசிய இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண அதிகார சபையிடம் ஒப்படைத்துப் பரிசோதித்து, அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் முந்தைய வழக்குத் தவணையின் போது உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest News
இலங்கை அணியில் உள்வாங்கப்பட வேண்டிய முக்கிய வீரர் குகதாஸ் மாதுலன்: லசித் மாலிங்க புகழாரம்
Local
16 June 2026
சபாநாயகரின் சகோதரரும் அரசாங்கத்துக்கு எதிராக விவசாயிகளுடன் வீதியில்!
Local
16 June 2026
இலங்கையில் முஹர்ரம் மாதத்துக்கான தலைப்பிறை தென்பட்டது!
Local
16 June 2026
தமிழர் பகுதிகளில் மீட்கப்பட்ட ரூ.161 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளின் அளவீட்டுப் பணிகள் நிறைவு!
Local
16 June 2026
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் அரசியல்வாதிகளை ஒடுக்க அரசாங்கம் முயற்சி: ஃப்ரீ லோயர்ஸ் அமைப்பு கண்டனம்
Local
16 June 2026
வைபவ் சூர்யவன்ஷி, இலங்கை A அணி வீரர்களுடன் முரண்பட்டது ஏன்? வெளியானது காரணம்
Local
16 June 2026
புதிய உச்சத்தைத் தொட்ட தங்கம் மற்றும் வெள்ளி விலை : இன்றைய அதிரடி உயர்வு!
Local
16 June 2026
இலங்கைக்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு, மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கியது இந்தியா
Local
16 June 2026
சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : 6.3 மெக்னிடியூட் அளவில் அதிர்வு!
Local
16 June 2026
நுவரெலியா - வெலிமடை வீதியில் பாரிய விபத்து: 4 வாகனங்கள் சேதம்
Local
16 June 2026