General16 June 2026

இலங்கையில் முஹர்ரம் மாதத்துக்கான தலைப்பிறை தென்பட்டது!

இலங்கையில் புதிய ஹிஜ்ரி 1448ஆம் ஆண்டின் முஹர்ரம் மாதத்துக்கான தலைப்பிறை தென்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய புதுவருடமான முஹர்ரம் மாதத்துக்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.

பிறைக் குழுத் தலைவர் மெளலவி ஹிஷாம் அல் பத்தாஹி தலைமையில் இடம்பெற்ற இந்த மாநாட்டின் போது நாட்டின் பல பாகங்களிலும் தலைப் பிறை தென்பட்டதற்கான உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி, புனித முஹர்ரம் மாதம் இன்று மஹ்ரிப் ‌ தொழுகையுடன் ஆரம்பமாவதாக பிறைக்குழுத் தலைவர் இலங்கை வாழ் மக்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

அந்தவகையில், நாளை (17 )புதன்கிழமையானது, ஹிஜ்ரி 1448 முஹர்ரம் மாதத்தின் முதலாம் பிறை என ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் புதிய ஹிஜ்ரி ஆண்டின் (1448) முதல் மாதமான முஹர்ரம் மாதம் நாளை (17) ஆரம்பமாகின்றது.
Related recommendation
Hiru TV News | Programmes