டிட்வா சூறாவளி காரணமாகப் பாதிக்கப்பட்ட, மலையக தொடருந்து பாதையின் நானுஓயா மற்றும் அம்பேவெல ஆகிய நிலையங்களுக்கு இடையிலான சேதமடைந்த தொடருந்து மார்க்கத்தின் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, மலையக தொடருந்து மார்க்கத்தின் நானுஓயா முதல் பதுளை வரையிலான பிரிவில் தொடருந்து சேவைகள் எதிர்வரும் சனிக்கிழமை (20) முதல் விசேட கால அட்டவணையின் கீழ் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மார்க்கத்துடனான தொடருந்து இயக்கத்தை சுமுகமான முறையில் மீண்டும் முன்னெடுப்பதை உறுதி செய்வதற்காக, திருத்தப்பட்ட கால அட்டவணையின் கீழ் சேவைகளை நடத்துவதற்குத் தொடருந்து திணைக்களம் ஏற்பாடுகளை செய்துள்ளது.
இதேவேளை, மலையக தொடருந்து மார்க்கத்தில் ரம்புக்கனை மற்றும் நானுஓயா ஆகிய நிலையங்களுக்கு இடைப்பட்ட பல சேதமடைந்த பகுதிகளில் இன்னமும் பராமரிப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த பிரிவுகளின் சீரமைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Latest News
ஆசனப்பட்டி விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் - ஜூன் 19 ஆம் திகதிக்கு பின்னர் புதிய சட்டம் அமுல்
Local
17 June 2026
உலக ஈட்டி எறிதல் தரவரிசை - 2ஆம் இடத்திற்கு முன்னேறி இலங்கை வீரர் ருமேஷ் தரங்க சாதனை
Local
17 June 2026
வருண ஜயசுந்தரவின் மனு மீதான விசாரணைகளை நிறைவு செய்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்
Local
17 June 2026
எரிபொருள் விலை குறித்து வெளியான தகவல்
Local
17 June 2026
நானுஓயா - பதுளை தொடருந்து சேவைகள் சனிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பம்!
Local
17 June 2026
ஈரான் உடனான புரிந்துணர்வு உடன்படிக்கை இறுதியானதல்ல - ட்ரம்ப்
Local
17 June 2026
அஸ்வெசும கொடுப்பனவு நாளை முதல் வங்கி கணக்குகளில் வைப்பு - 10 பில்லியனுக்கும் அதிக நிதி ஒதுக்கீடு!
Local
17 June 2026
தெல்தெனிய மருத்துவமனை அருகே பெண்ணின் உடலம் மீட்பு
Local
17 June 2026
கர்தினாலுக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்ததாக பரவும் செய்திகளில் உண்மையில்லை - அருட்தந்தை சிறில் காமினி
Local
17 June 2026
192 பதில் உப அஞ்சல் அதிபர்களுக்கு நிரந்தர நியமனம்
Local
17 June 2026