தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசின் முதலாவது தமிழ் நாடு சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று (18) காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இக்கூட்டத்தொடரில் ஆளுநர் அர்லேகர் ஆக்கபூர்வ உரையை நிகழ்த்தவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த 17 ஆவது சட்டசபைத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, கடந்த மே மாதம் 13 ஆம் திகதி சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் முதலமைச்சர் விஜய் தனது பெரும்பான்மையை நிரூபித்திருந்தார்.
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் பின்னர் சட்டசபை அமர்வுகள் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, த.வெ.க. அரசின் முதலாவது கூட்டத்தொடர் இன்று கூடவுள்ளது.
இன்றைய கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்காக ஆளுநர் அர்லேகர் காலை 9.55 மணிக்கு சட்டசபைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலை 10.00 மணிக்கு சபை நடவடிக்கைகள் ஆரம்பமானதும், அரசினால் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ள உரையை ஆளுநர் ஆங்கிலத்தில் வாசிப்பார். இந்த உரையில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆளுநரின் உரையைத் தொடர்ந்து, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அதன் தமிழ் மொழிபெயர்ப்பை சபையில் வாசிப்பார். அத்துடன் இன்றைய சபை நடவடிக்கைகள் நிறைவடையவுள்ளதுடன், அதன் பின்னர் சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வு குழுவுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
Latest News
டெங்கு ஒழிப்பு நடவடிக்கை - மாவட்ட மற்றும் பிரதேச செயலக மட்டங்களில் விசேட குழுக்கள் அமைப்பு
Local
18 June 2026
இயற்கை அனர்த்த பாதிப்புகளில் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்க புதிய காப்புறுதித் திட்டம்
Local
18 June 2026
மக்களை உலுக்கிய கொடூரம் : தீய ஆவியை விரட்ட மயானத்தில் புதைகுழிகளைத் தோண்டிய பேயோட்டும் குழுவினர்!
Local
18 June 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் - கைதுக்கு எதிரான கோட்டாபயவின் மனு ஒத்திவைப்பு
Local
18 June 2026
சூர்யவன்ஷி மீது நடவடிக்கையா? பிசிசிஐ விளக்கம்
Local
18 June 2026
வீசி எறிந்த மீன்களுக்குள் இருந்த ரகசியம் : கேரளக் கடலில் சிக்கிய புதிய வகை சுறா - விஞ்ஞானிகள் சாதனை!
Local
18 June 2026
மொஸ்கோ மீது யுக்ரைன் தாக்குதல்: எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இலக்கு, வானூர்தி நிலையங்கள் முடக்கம்
Local
18 June 2026
பறவைக் காய்ச்சலின் தாக்கம்: அவுஸ்திரேலிய அண்டார்டிக் தீவுகளில் 13,000 க்கும் மேற்பட்ட சீல் குட்டிகள் உயிரிழப்பு
Local
18 June 2026
சமூக ஊடகப் பயன்பாட்டிற்கான குறைந்தபட்ச வயதை 15 ஆக நிர்ணயித்தது ஐக்கிய அரபு இராச்சியம்
Local
18 June 2026
ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதானவரின் 16 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்
Local
18 June 2026