General18 June 2026

எதிர்வரும் 20ஆம் திகதி முதல் நானுஓயா – பதுளை இடையிலான தொடருந்து சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

டிட்வா சூறாவளியின் பின்னர், நானுஓயா முதல் பதுளை வரையிலான மலையகத் தொடருந்து சேவைகள் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த தொடருந்து பாதையில் அண்மைய நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதனைத் தொடர்ந்தே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய, தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நானுஓயா மற்றும் பதுளைக்கு இடையிலான தொடருந்து சேவைகள் அனைத்தும் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் வழமை போன்று இயங்கும் என தொடருந்து திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes