வலுவடைந்து வரும் எல் நினோ காலநிலை நிகழ்வு மற்றும் இந்தியப் பெருங்கடல் இருமுனையகத்தின் மாற்றங்கள் காரணமாக, நடப்பு ஆண்டின் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கையில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என மேற்கு அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தின் கடலோரப் பெருங்கடலியல் பேராசிரியர் சரித பத்தியராச்சி தெரிவித்துள்ளார்.
வலுவடைந்து வரும் எல் நினோ நிலைமைகளுடன், இந்தியப் பெருங்கடல் இருமுனையகத்தின் பலவீனமான நேர்மறை நிலையும் இணைந்து எதிர்வரும் மாதங்களில் இலங்கையின் வானிலை வடிவங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பேராசிரியர் சரித பத்தியராச்சியின் கணிப்பின்படி,
செப்டம்பர் வரை (தென்மேற்கு பருவக்காற்று காலம்) இந்த காலப்பகுதியில் வழக்கமாகப் பதிவாகும் மழைவீழ்ச்சி இந்த முறை குறைய வாய்ப்புள்ளது.
ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள் வழக்கத்தை விட அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதுடன், அது 100 மில்லிமீற்றரைக் கடக்கக்கூடும்.
அடுத்த வருட ஆரம்பம் (ஜனவரி முதல் ஏப்ரல் வரை) மீண்டும் சராசரியை விடக் குறைவான மழைவீழ்ச்சியே பதிவாக வாய்ப்புள்ளது.
அவுஸ்திரேலிய வானிலை ஆய்வுப் பணியகம் (Australian Bureau of Meteorology) ஜூன் 14ஆம் திகதி சேகரித்த தரவுகளின் அடிப்படையில் தனது காலநிலை முன்னறிவிப்பை மறுபரிசீலனை செய்துள்ளது.
அதன்படி , பசுபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை சராசரியை விட 0.92°C ஆக உயர்ந்துள்ளது.
முன்னதாகக் கணிக்கப்பட்டதை விட எல் நினோ நிகழ்வு அதிக வலுவடையக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதமளவில் மத்திய பசுபிக் பெருங்கடலின் வெப்பநிலை சராசரியை விட 3.3°C வரை உயரக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடல் வெப்பநிலை தற்போதைக்கு நடுநிலையாக (neutral range) இருந்தாலும், கடந்த இரு வாரங்களாக உயர்வடைந்து வருகிறது.
ஜூன் 14 அன்றைய தரவுகளின்படி, இந்தியப் பெருங்கடல் இருமுனையகச் சுட்டெண் எதிர்மறை 0.13°C ஆகப் பதிவாகியுள்ளது.

Latest News
டெங்கு ஒழிப்பு நடவடிக்கை - மாவட்ட மற்றும் பிரதேச செயலக மட்டங்களில் விசேட குழுக்கள் அமைப்பு
Local
18 June 2026
இயற்கை அனர்த்த பாதிப்புகளில் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்க புதிய காப்புறுதித் திட்டம்
Local
18 June 2026
மக்களை உலுக்கிய கொடூரம் : தீய ஆவியை விரட்ட மயானத்தில் புதைகுழிகளைத் தோண்டிய பேயோட்டும் குழுவினர்!
Local
18 June 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் - கைதுக்கு எதிரான கோட்டாபயவின் மனு ஒத்திவைப்பு
Local
18 June 2026
சூர்யவன்ஷி மீது நடவடிக்கையா? பிசிசிஐ விளக்கம்
Local
18 June 2026
வீசி எறிந்த மீன்களுக்குள் இருந்த ரகசியம் : கேரளக் கடலில் சிக்கிய புதிய வகை சுறா - விஞ்ஞானிகள் சாதனை!
Local
18 June 2026
மொஸ்கோ மீது யுக்ரைன் தாக்குதல்: எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இலக்கு, வானூர்தி நிலையங்கள் முடக்கம்
Local
18 June 2026
பறவைக் காய்ச்சலின் தாக்கம்: அவுஸ்திரேலிய அண்டார்டிக் தீவுகளில் 13,000 க்கும் மேற்பட்ட சீல் குட்டிகள் உயிரிழப்பு
Local
18 June 2026
சமூக ஊடகப் பயன்பாட்டிற்கான குறைந்தபட்ச வயதை 15 ஆக நிர்ணயித்தது ஐக்கிய அரபு இராச்சியம்
Local
18 June 2026
ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதானவரின் 16 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்
Local
18 June 2026