General18 June 2026

ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதானவரின் 16 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்

ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர், சட்டவிரோதமான முறையில் சம்பாதித்த சுமார் 16 இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் நிதி துய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

குறித்த சந்தேகநபர் கடந்த பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி ஹெரோயின் போதைப்பொருளுடன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

யாழ்ப்பாணம், அரியலைப் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதைத் தொடர்ந்து, சந்தேகநபர் சட்டவிரோதமான முறையில் ஈட்டிய சொத்துக்கள் குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாகக் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய, நிதி துய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட விசாரணைகளின் பின்னர், சந்தேகநபருக்குச் சொந்தமான 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான படகு, அதன் இயந்திரம் மற்றும் சுமார் 9 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு உந்துருளிகள் என்பன இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.

இச்சந்தேகநபர் மற்றும் அவருக்குச் சொந்தமான சொத்துக்கள் குறித்து யாழ்ப்பாணப் பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes