நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் எரிபொருள் மானியங்கள் அனைத்தையும் நீக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) உடன்பாட்டை எட்டியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் கொழும்பு அலுவலகப் பொறுப்பதிகாரியைச் சந்தித்து கலந்துரையாடிய போதே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த மானியக் குறைப்பு நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டாம் என நாணய நிதியத்திடம் தாம் மிகத் தெளிவாக வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
எரிபொருள் மானியம் முழுமையாக நீக்கப்பட்டால், அதன் விளைவுகள் நாட்டு மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றமாக அமையுமென அவர் எச்சரித்துள்ளார்.
டீசல் விலை தோராயமாக 142 ரூபாவினால் அதிகரிக்கக் கூடும். அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகளின் விலைகள் மேலும் அதிகரிக்கும்.
மருந்து விலைகள் 7 வீதத்தால் அதிகரிக்கலாம் என அரசாங்கத் தரப்பில் கூறப்பட்ட போதிலும், இந்த ஒட்டுமொத்தப் பொருளாதார சுமையினால் நாட்டின் வாழ்க்கைச் செலவு மேலும் 11 வீதத்தால் உயரும் அபாயம் காணப்படுகிறது.
மருந்து விலைகள் 7 வீதத்தால் அதிகரிக்கலாம் என அரசாங்கத் தரப்பில் கூறப்பட்ட போதிலும், இந்த ஒட்டுமொத்தப் பொருளாதார சுமையினால் நாட்டின் வாழ்க்கைச் செலவு மேலும் 11 வீதத்தால் உயரும் அபாயம் காணப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் வாழ முடியாத ஒரு இக்கட்டான சூழ்நிலை நாட்டில் உருவாகும் என சர்வதேச நாணய நிதியத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளதாக ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
IMF என்பது வெறும் வங்கி மட்டுமல்ல, நாட்டின் மக்களின் நலன்புரி நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் அவதானம் செலுத்த வேண்டும் என இதன்போது கோரப்பட்டுள்ளது.
ஹேக்கர்களின் தலையீடு இன்றி, மத்திய திறைசேரியினால் அவுஸ்திரேலியாவின் போலி வங்கிக் கணக்கொன்றிற்கு அனுப்பப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி முறைகேடு மற்றும் சுமார் 12 தடவைகள் இடம்பெற்ற நிலக்கரி கொள்வனவு மோசடிகள் குறித்தும் இதன்போது சர்வதேச நாணய நிதியத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார்.
இவ்வாறான பாரிய நிதி மோசடிகள் குறித்து சர்வதேச நாணய நிதியம் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது என்றும், ஊழல்களைக் கண்டறிந்து தடுப்பதில் அவர்கள் அக்கறை காட்ட வேண்டும் என்றும் அக்கூட்டத்தில் மேலும் வலியுறுத்தியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல். பீரிஸ் மேலும் தெரிவித்தார்.
Latest News
இஸ்ரேல் - ஹிஸ்புல்லா போர் நிறுத்தத்துக்கு இணக்கம்!
Local
19 June 2026
சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல்
Local
19 June 2026
டெல்லி அணியின் பயிற்றுவிப்பாளர் குழுவில் யுவராஜ் சிங்? வெளியான முக்கிய தகவல்
Local
19 June 2026
அரசுக்கு 1.4 கோடி நட்டம்: கைதான லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளருக்கு பிணை!
Local
19 June 2026
சட்டசபையில் காரசார விவாதம் - இயக்குநர் அட்லீயை வறுத்தெடுத்த சட்டமன்ற உறுப்பினர்
Local
19 June 2026
"யுத்தம் தோற்கடிக்கப்பட்டாலும் பிரிவினைவாதம் தோற்கடிக்கப்படவில்லை"
Local
19 June 2026
பெண் காவல்துறை கான்ஸ்டபிள்கள் ஆட்சேர்ப்பில் கடுமையான அநீதி: அரசாங்கத்திடம் சஜித் பிரேமதாச கேள்வி!
Local
19 June 2026
நீதிமன்றத் தடைக்கு மத்தியில் செம்மணியில் மாபெரும் போராட்டம்
Local
19 June 2026
ஆசனப் பட்டிகளுக்கான 3 மாத சலுகைக் காலம் இன்றுடன் நிறைவு: சோதனையின் போது சிக்கிய பேருந்து பயணிகள்!
Local
19 June 2026
எல்பிட்டிய பகுதியில் உள்ள தேயிலை தொழிற்சாலையில் தீப்பரவல்
Local
19 June 2026