முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த குற்றப்பத்திரிகையில் சஷீந்திர ராஜபக்ஷவுடன் இணைந்து சேபாலிகா சமன் குமாரி மற்றும் கீர்த்தி பண்டார கொட்டகம ஆகியோரும் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் 10 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், சாட்சியாளர்களாக 30 பேரும், வழக்கு சான்றுப் பொருட்களாக 38 ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி நடைபெற்ற போராட்டத்தின் போது, செவனகல - கிரி இப்பன்பெவ பகுதியில் உள்ள மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான காணியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடம் உள்ளிட்ட சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டது.
இதற்காக, 8.85 மில்லியன் ரூபாய் இழப்பீட்டைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், இழப்பீட்டு அலுவலகத்துடன் தொடர்புடைய அரசாங்க அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக சந்தேகநபர்கள் தங்களது உத்தியோகபூர்வ அதிகாரத்தைப் பயன்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்தச் செயற்பாடானது ஊழல் புரிந்தமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமைக்குச் சமம் என கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளதோடு, இது தொடர்பான வழக்கு விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னெடுக்கப்படவுள்ளன.

Latest News
இஸ்ரேல் - ஹிஸ்புல்லா போர் நிறுத்தத்துக்கு இணக்கம்!
Local
19 June 2026
சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல்
Local
19 June 2026
டெல்லி அணியின் பயிற்றுவிப்பாளர் குழுவில் யுவராஜ் சிங்? வெளியான முக்கிய தகவல்
Local
19 June 2026
அரசுக்கு 1.4 கோடி நட்டம்: கைதான லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளருக்கு பிணை!
Local
19 June 2026
சட்டசபையில் காரசார விவாதம் - இயக்குநர் அட்லீயை வறுத்தெடுத்த சட்டமன்ற உறுப்பினர்
Local
19 June 2026
"யுத்தம் தோற்கடிக்கப்பட்டாலும் பிரிவினைவாதம் தோற்கடிக்கப்படவில்லை"
Local
19 June 2026
பெண் காவல்துறை கான்ஸ்டபிள்கள் ஆட்சேர்ப்பில் கடுமையான அநீதி: அரசாங்கத்திடம் சஜித் பிரேமதாச கேள்வி!
Local
19 June 2026
நீதிமன்றத் தடைக்கு மத்தியில் செம்மணியில் மாபெரும் போராட்டம்
Local
19 June 2026
ஆசனப் பட்டிகளுக்கான 3 மாத சலுகைக் காலம் இன்றுடன் நிறைவு: சோதனையின் போது சிக்கிய பேருந்து பயணிகள்!
Local
19 June 2026
எல்பிட்டிய பகுதியில் உள்ள தேயிலை தொழிற்சாலையில் தீப்பரவல்
Local
19 June 2026