அம்பலாங்கொடை, ஊரவத்தை பகுதியில் உள்ள ரஜமஹா விகாரையின் ஊர்வலம் நாளை சனிக்கிழமை (20) நடைபெறவுள்ளதை முன்னிட்டு, காலி - கொழும்பு பிரதான வீதியின் அம்பலாங்கொடை பகுதியில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
நாளை பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை இந்த விசேட போக்குவரத்துத் திட்டம் அமுலில் இருக்கும் என காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாளை பிற்பகல் ஊரவத்தை சந்தியிலிருந்து ஆரம்பமாகும் இந்த ஊர்வலம், காலி வீதி வழியாகச் சென்று, ஹிரேவத்தை புத்தர் சிலைக்கு அருகாமையால் பிரதான வீதி ஊடாக அம்பலாங்கொடை நகரைச் சென்றடைய திட்டமிடப்பட்டுள்ளது.
பின்னர், இந்த ஊர்வலம் மீண்டும் அதே சந்தி வழியாக ஊரவத்தை பகுதியை சென்றடையவுள்ளதால், காலி - கொழும்பு பிரதான வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்கள் நாளை பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
Latest News
பெண் காவல்துறை கான்ஸ்டபிள்கள் ஆட்சேர்ப்பில் கடுமையான அநீதி: அரசாங்கத்திடம் சஜித் பிரேமதாச கேள்வி!
Local
19 June 2026
நீதிமன்றத் தடைக்கு மத்தியில் செம்மணியில் மாபெரும் போராட்டம்
Local
19 June 2026
ஆசனப் பட்டிகளுக்கான 3 மாத சலுகைக் காலம் இன்றுடன் நிறைவு: சோதனையின் போது சிக்கிய பேருந்து பயணிகள்!
Local
19 June 2026
எல்பிட்டிய பகுதியில் உள்ள தேயிலை தொழிற்சாலையில் தீப்பரவல்
Local
19 June 2026
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் ஐசிசி தலைவர் ஜெய் ஷா
Local
19 June 2026
உயிர்த்த தாக்குதல் விசாரணை: FBI அறிக்கை எங்கே? ஐக்கிய தேசிய கட்சி கேள்வி
Local
19 June 2026
'புஷ்பா 2' திரையிடலின் போது ஏற்பட்ட மரணம்: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு நீதிமன்றம் அழைப்பாணை
Local
19 June 2026
சவக்காரத்துக்கு வரி, சூதாட்ட நிறுவனங்களுக்கு சலுகையா? – ஹர்ஷ டி சில்வா கேள்வி!
Local
19 June 2026
அம்பலாங்கொடையில் நாளை விசேட போக்குவரத்துத் திட்டம்: மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறை அறிவுறுத்தல்!
Local
19 June 2026
எரிபொருள் மானியம் நீக்கப்பட்டால் வாழ்க்கைச் செலவு 11 வீதத்தால் அதிகரிக்கும்!" – ஐ.எம்.எப் அதிகாரியிடம் ஜி.எல். பீரிஸ் எச்சரிக்கை
Local
19 June 2026