General19 June 2026

மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரைக்கும் தொடருந்து சேவையின் பரீட்சார்த்த நடவடிக்கை முன்னெடுப்பு

மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரைக்கும் தொடருந்து சேவையின் பரீட்சார்த்த நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை மதியம் இடம் பெற்றது.

தலைமன்னாரில் இருந்து கொழும்பிற்கான தொடருந்து சேவைகள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட புயல் காரணமாக தலைமன்னாரில் இருந்து கொழும்புக்கு செல்லும் தொடருந்து சேவையின் பாதையில் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக குறித்த சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த தொடருந்து பாதைகள் புனரமைப்பு செய்யப்பட்ட நிலையில் தலைமன்னாரில் இருந்து கொழும்பு வரையிலான தொடருந்து சேவைகளை முன்னெடுக்க இலங்கை தொடருந்து திணைக்களம் நடவடிக்கைகளை மேற் கொண்டது.

அதற்கு அமைவாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (19) மதியம் மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரைக்கும் தொடருந்து சேவையின் பரீட்சார்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

விரைவில் தலைமன்னாரில் இருந்து கொழும்பிற்கான தொடருந்து சேவைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes