சட்டவிரோதமாக தமிழ்நாட்டுக்கு படகில் சென்று, போலி ஆவணங்கள் மூலம் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கை இளைஞர் ஒருவர் சென்னை - ஆவடி பகுதியில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியா சென்ற இவர், கன்னியாகுமரி, திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தங்கி உணவகங்களில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இதற்கிடையில், போலி ஆவணங்கள் தயாரித்து அதன்மூலம் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளையும் அவர் பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஆவடி - சேக்காடு பகுதியில் பெண் ஒருவருடன் குறித்த இளைஞர் வசித்து வந்துள்ளார்.
இந்தநிலையில், அவர் திடீரென மாயமானதாக அந்த பெண் காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில், குறித்த இளைஞரை காவல் நிலையத்துக்கு வரவழைத்து காவல்துறையினர் விசாரணை நடத்திய போதே, அவர் விசா இன்றி போலி ஆவணங்களுடன் தங்கியிருந்தமை அம்பலமாகியுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள குறித்த இளைஞரிடம் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest News
சாதாரண தரப் பரீட்சையில் 11,795 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் ‘A’ சித்தி
Local
20 June 2026
"தோல்விகளால் சோர்வடைய வேண்டாம்; ஒவ்வொருவருக்கும் பொருத்தமான துறை உலகில் நிச்சயம் உண்டு"
Local
20 June 2026
சோமரத்ன ராஜபக்சவை, யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வந்து எந்ததெந்த பகுதிகளில் மனித புதைகுழிகள் இருக்கின்றது என்பதை கண்டறிய வேண்டும்
Local
20 June 2026
நடிகை ருக்மிணி வசந்தின் Deepfake புகைப்படங்களை வெளியிட்ட மூவர் பெங்களூரில் கைது
Local
20 June 2026
புசல்லாவை ரொச்சைல்ட் தோட்டத்தைச் சேர்ந்த 05 தொழிலாளர்களும் திங்கட்கிழமையுடன் மீண்டும் பணியில் இணைவு
Local
20 June 2026
பதுளை - நானுஓயா தொடருந்து சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்
Local
20 June 2026
உலக சந்தையில் விலை குறைந்தாலும் உடனடியாக எரிபொருள் விலையைக் குறைக்க முடியாது
Local
20 June 2026
கட்டார் வழங்கிய சொகுசு வானூர்தி: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிமுகம்
Local
20 June 2026
அமெரிக்க - ஈரான் பிரதிநிதிகள் சுவிட்சர்லாந்து பயணம்!
Local
20 June 2026
வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளி: அமெரிக்கா மீது ஈரான் கால்பந்து சம்மேளனம் குற்றச்சாட்டு
Local
20 June 2026