இறுதி யுத்தத்தின் போது இலங்கை அரசுக்கு கொழும்பு மற்றும் காலியில் அமைந்திருந்த இரு களஞ்சியங்கள் ஊடாக சீன ஆயுதங்களை வழங்கியமை தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஜகநாத் கொலம்பகேயை சர்வதேச பொறிமுறை ஊடாக விசாரணை செய்ய வேண்டும் என வேலன் சுவாமிகள் கோரிக்கை முன்வைத்தார்.
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கேட்டு நேற்று (19) இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள்.
தமிழருக்கு அநீதியை நிகழ்த்திய இலங்கை அரசுக்கு இலங்கையில் வைத்தே சீனா இரு இடங்களில் இருந்து ஆயுதங்கள் வழங்கியதாக முன்னாள் கடற்படை தளபதி கொலம்பகே கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்திருக்கிறார்.
அவருடைய கருத்து மிகவும் பாரதூரமானது தமிழ் மக்கள் மீது அநீதியை நிகழ்த்திய இலங்கை அரசு பயன்படுத்திய இரசாயன ஆயுதங்கள் தொடர்பில் ஏற்கனவே தகவல்கள் வெளிவந்தது.
அது மட்டுமல்லாது இறுதி யுத்தத்தில் பாவிக்கப்பட்ட கொத்தணி மற்றும் பொஸ்பரஸ் குண்டுகள் எங்கிருந்து பெறப்பட்டன யார் அதனை வழங்கியிருப்பார்கள் என்பது தொடர்பிலும் முன்னாள் கடற்படை தளபதியை சர்வதேச ரீதியாக விசாரணை செய்ய வேண்டும்.
செம்மணியில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் சுமார் 380 ஐ தாண்டி உள்ள நிலையில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அநீதிக்கு செம்மணி ஆதாரமாக இருக்கிறது.
அதேபோன்று முள்ளிவாய்க்காலிலும் தமிழ் மக்களுக்கு அநீதி நிகழ்த்தப்பட்டுள்ளது அது தொடர்பிலும் சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Latest News
ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவிப்பு!
Local
20 June 2026
பொதுநலவாய போட்டியில் தங்கம் வெல்வதே பிரதான இலக்கு
Local
20 June 2026
றோயலை வீழ்த்திய சென்.பீட்டர்ஸ், கிண்ணத்தை தமதாக்கியது
Local
20 June 2026
வெளிநாடுகளில் சாதனை படைத்த ருமேஷ் தரங்க நாட்டை வந்தடைந்தார்
Local
20 June 2026
காலியிலிருந்த சீன ஆயுதக் களஞ்சியம் குறித்து முன்னாள் கடற்படை தளபதியை விசாரிக்க வேண்டும் - வேலன் சுவாமி கோரிக்கை
Local
20 June 2026
போர்நிறுத்தம் அமுலுக்கு வந்த சில மணித்தியாலங்களில் இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் 10 பேர் உயிரிழப்பு!
Local
20 June 2026
சினிமா, கலைத்துறையை நவீனமயமாக்க தேசிய வேலைத்திட்டம் அவசியம் - சஜித் வலியுறுத்தல்
Local
20 June 2026
இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஃபிட்ச் ரேட்டிங்ஸ் எச்சரிக்கை!
Local
20 June 2026
வாகனங்களுக்கு ஆசனப்பட்டி பொருத்த மேலும் மூன்று மாத காலம் அவகாசம்
Local
20 June 2026
தென் ஆபிரிக்காவுக்கான HIV ஒழிப்பு நிதியுதவியை நிறுத்துகிறது அமெரிக்கா
Local
20 June 2026