அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, உலகளாவிய சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன் பலனாக, பாகிஸ்தான் அரசு உள்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிரடியாகக் குறைத்துள்ளது.
இதன்படி பெட்ரோல் விலை லீற்றருக்கு 74 ரூபாயும், டீசல் விலை லீற்றருக்கு 67 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த அதிரடி விலைக்குறைப்பால், பெட்ரோல் விலை 373 ரூபாயிலிருந்து 299 ரூபாயாகவும், டீசல் விலை 378 ரூபாயிலிருந்து 311 ரூபாயாகவும் குறைந்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் முதல் அமெரிக்கா - ஈரான் இடையே நிலவி வந்த மோதலால், ஹோர்முஸ் நீரிணை வழியிலான உலகளாவிய எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு மசகு எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது.
தற்போது இஸ்லாமாபாத்தில் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் உலகச் சந்தையில் பதற்றம் தணிந்து எண்ணெய் விலை குறைந்துள்ளது.
இது குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை வீழ்ச்சியின் முழுப் பலனையும் மக்களுக்கு நேரடியாகக் கடத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
Latest News
ஹோர்முஸ் நீரிணை ஈரானின் கட்டுப்பாட்டில் இல்லை - அமெரிக்கா அதிரடி அறிவிப்பு!
Local
21 June 2026
அழுத்தங்களைக் கையாள்வதே எங்களின் பலம் - திலக் வர்மா
Local
21 June 2026
பாகிஸ்தானில் எரிபொருள் விலை அதிரடியாக குறைப்பு
Local
21 June 2026
எரிபொருள் விற்பனை மூலம் இலாபம் ஈட்டும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை
Local
20 June 2026
அசாமில் அரிய வகை 'தங்க லங்கூர்' குரங்குகள் கடத்தல்: 9 பேர் கைது, ஒரு குரங்கு உயிரிழந்த நிலையில் மீட்பு
Local
20 June 2026
வட்ஸ்அப்பின் அடுத்த அப்டேட்: மெசேஜ்களுக்கும் வருகிறது 'View-once' வசதி!
Local
20 June 2026
சாய்ந்தமருதுவில் போக்குவரத்து விதிகளை மீறிய 33 உந்துருளிகள் பறிமுதல்: சந்தேக நபர்கள் மீது சட்ட நடவடிக்கை
Local
20 June 2026
இந்த ஆண்டு மாகாண சபை தேர்தல் நடத்தப்படுமா? - மஹிந்த தேசப்பிரியவின் கணிப்பு
Local
20 June 2026
ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவிப்பு!
Local
20 June 2026
பொதுநலவாய போட்டியில் தங்கம் வெல்வதே பிரதான இலக்கு
Local
20 June 2026