வீதி பொது போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் 33 க்கும் மேற்பட்ட உந்துருளிகள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றினை செலுத்திய சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட நகரப்பகுதி உட்பட புறநகர் பகுதிகளில் இன்று (20) சனிக்கிழமை விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, உந்துருளி ஆவணங்கள் மற்றும் காப்புறுதி (Insurance) இன்றி பயணித்தமை, சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்தியமை, தலைக்கவசம் அணியாது சென்றமை, ஒரு உந்துருளியில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணித்தமை, அதிவேகமாகச் சென்றமை மற்றும் அதிக ஒலி எழுப்பும் வகையில் சைலன்சர்களைப் பொருத்தி உந்துருளிகளை செலுத்தியமை உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சட்ட திட்டங்களை மீறிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது காவல்துறை நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய, வீதி போக்குவரத்து விதிகளை மீறிய குற்றச்சாட்டில் பலரது உந்துருளிகள் மற்றும் சான்றுப் பொருட்கள் என்பன சட்ட நடவடிக்கைக்காக சாய்ந்தமருது காவல்துறை நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
கிழக்குப் பிராந்தியத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் உத்தரவின் பேரில், அம்பாறை பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் பணிப்புரைக்கு அமைவாக இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மேலும், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சியின் நெறிப்படுத்தலில், கல்முனை பிராந்திய உதவி காவல்துறை அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசாரின் வழிகாட்டுதலுடன், சாய்ந்தமருது காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி, காவல்துறை பரிசோதகர் டி.எஸ்.இந்திக தலைமையில் இந்த விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட உந்துருளிகளின் உரிமையாளர்களுக்கு, சாய்ந்தமருது காவல்துறை நிலைய பொறுப்பதிகாரியினால் எச்சரிக்கையுடன் கூடிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதுடன், சட்ட நடவடிக்கைகாக கைப்பற்றப்பட்ட உந்துருளிகள் தற்போது தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் சாய்ந்தமருது காவல்துறை நிலையத்தின் பல்வேறு பிரிவுகளையும் சேர்ந்த காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Latest News
அசாமில் அரிய வகை 'தங்க லங்கூர்' குரங்குகள் கடத்தல்: 9 பேர் கைது, ஒரு குரங்கு உயிரிழந்த நிலையில் மீட்பு
Local
20 June 2026
வட்ஸ்அப்பின் அடுத்த அப்டேட்: மெசேஜ்களுக்கும் வருகிறது 'View-once' வசதி!
Local
20 June 2026
சாய்ந்தமருதுவில் போக்குவரத்து விதிகளை மீறிய 33 உந்துருளிகள் பறிமுதல்: சந்தேக நபர்கள் மீது சட்ட நடவடிக்கை
Local
20 June 2026
இந்த ஆண்டு மாகாண சபை தேர்தல் நடத்தப்படுமா? - மஹிந்த தேசப்பிரியவின் கணிப்பு
Local
20 June 2026
ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவிப்பு!
Local
20 June 2026
பொதுநலவாய போட்டியில் தங்கம் வெல்வதே பிரதான இலக்கு
Local
20 June 2026
றோயலை வீழ்த்திய சென்.பீட்டர்ஸ், கிண்ணத்தை தமதாக்கியது
Local
20 June 2026
வெளிநாடுகளில் சாதனை படைத்த ருமேஷ் தரங்க நாட்டை வந்தடைந்தார்
Local
20 June 2026
காலியிலிருந்த சீன ஆயுதக் களஞ்சியம் குறித்து முன்னாள் கடற்படை தளபதியை விசாரிக்க வேண்டும் - வேலன் சுவாமி கோரிக்கை
Local
20 June 2026
போர்நிறுத்தம் அமுலுக்கு வந்த சில மணித்தியாலங்களில் இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் 10 பேர் உயிரிழப்பு!
Local
20 June 2026