International21 June 2026

உலகக் கிண்ண கால்பந்து தொடர்: உலக ரசிகர்களைக் கவர்ந்து வரும் அமெரிக்காவின் விருந்தோம்பல்

உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இணை நாடாக அமெரிக்கா அறிவிக்கப்பட்டபோது, விசா நடைமுறைகள், அதிக செலவு, துப்பாக்கிச் சூடு கலாசாரம் மற்றும் கால்பந்து விளையாட்டின் மீதான உள்ளூர் மக்களின் ஆர்வம் குறைவு போன்ற காரணங்களால் சர்வதேச ரசிகர்கள் மத்தியில் பலத்த சந்தேகங்கள் நிலவின
.
எனினும், தொடர் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்காவிற்கு முதன்முறையாக வருகை தந்துள்ள ரசிகர்கள் அங்குள்ள 24 மணி நேர சில்லறை வணிகக் கலாசாரம், இலவச குளிர்பான மறுநிரப்பல்கள் மற்றும் அமெரிக்க மக்களின் அன்பான வரவேற்பு போன்ற நேர்மறையான அனுபவங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

ஸ்கொட்லாந்து ரசிகை ஒருவர், பாஸ்டன் நகரிலுள்ள விடுதி ஒன்றில் சந்தித்த உள்ளூர் மக்கள், தங்களை மிகவும் அன்போடு வரவேற்றதாகவும், அங்குள்ளவர்கள் அனைவரும் மிகவும் நட்பாகப் பழகுவதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள சுவிட்சர்லாந்து ரசிகர் ஒருவர், அமெரிக்க மக்கள் அனைவரும் மிகவும் வெளிப்படையாகவும், நட்புடனும் பழகுவது தனக்குப் புதியதொரு அனுபவமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த 2026 உலகக் கிண்ணத் தொடர், நியூயோர்க், லொஸ் ஏஞ்சல்ஸ் போன்ற வழக்கமான சுற்றுலாத் தலங்களைத் தாண்டி, கன்சாஸ் சிட்டி, அட்லாண்டா, டல்லாஸ் மற்றும் ஹஸ்டன் போன்ற பிற அமெரிக்க நகரங்களுக்கும் சர்வதேச பார்வையாளர்களை அழைத்துச் சென்றுள்ளதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes