பணமோசடி குற்றச்சாட்டின் கீழ் நேபாளத்தின் முன்னாள் நிதி அமைச்சர் விஷ்ணு பிரசாத் பவுடல் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முந்தைய அரசாங்கங்களின் ஊழல்களுக்கு எதிராக, தற்போதைய பிரதமர் பலேந்திர ஷா தலைமையிலான இளைய தலைமுறையினரின் ஆதரவுடனான அரசாங்கம் முன்னெடுத்து வரும் தீவிர நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக இக்கைது இடம்பெற்றுள்ளது.
நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் அரசாங்கத்தில் முக்கிய புள்ளியுமான 66 வயதுடைய பவுடல், மேற்கு நேபாளத்தில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊழலுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட தீவிர போராட்டங்களை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பே கே.பி. சர்மா ஒலியின் அரசாங்கம் கவிழ்ந்தது.
இதன்போது ஏற்பட்ட வன்முறைகளைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டில் முன்னாள் பிரதமர் ஒலியும் அவரது உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரும் கைது செய்யப்பட்டு, தற்போது பிணையில் உள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் ஊழலை ஒழிப்பதாக உறுதியளித்து ஆட்சியைப் பொறுப்பேற்ற 36 வயதுடைய ராப் பாடகரான தற்போதைய பிரதமர் பலேந்திர ஷா, கடந்த கால ஊழல்களுக்கு எதிராக இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த கைது குறித்து விஷ்ணு பிரசாத் பவுடலிடமிருந்து எவ்வித கருத்தும் வெளிவராத நிலையில், கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து கலந்துரையாட, கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை கூடவுள்ளனர்.
Latest News
அரச மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம்
Local
23 June 2026
முதலமைச்சர் விஜய்யை இன்ஸ்டாகிராமில் 'Unfollow' செய்த த்ரிஷா
Local
23 June 2026
சிரேஷ்ட அணி ஜெர்சியைப் பெற்றார் சூரியவன்ஷி - ரெய்னா, ஹர்பஜனின் எண் வழங்கப்பட்டது!
Local
23 June 2026
நண்பகலுக்குப் பின்னர் மீண்டும் சரிந்த தங்க விலை!
Local
23 June 2026
தொலைக்காட்சிகளிலும் இன்ஸ்டாகிராம் செயலி: மெட்டா நிறுவனத்தின் புதிய வசதி!
Local
23 June 2026
ஐரோப்பாவில் கடும் வெப்ப அலை: பிரான்சில் நீர்நிலைகளில் மூழ்கி 40 பேர் உயிரிழப்பு
Local
23 June 2026
தேசிய மீலாத் விழா அழைப்பிதழ் விவகாரம்: நாடாளுமன்றத்தில் எம்.எஸ். உதுமாலெப்பை கேள்வி – குறைபாடுகளை நிவர்த்திக்க அரசாங்கம் உறுதி!
Local
23 June 2026
ஐந்து வயதுக்குக் குறைந்த பிள்ளைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த விசேட தேசிய திட்டம்: அமைச்சரவை ஒப்புதல்!
Local
23 June 2026
பதுளை நீதிமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க முன்னிலை
Local
23 June 2026
கிழக்கு மாகாண காணிகளைப் பாதுகாக்க ஜனாதிபதியின் அதிரடித் திட்டம்: விசேட குழு மற்றும் பிரதி காவல்துறை மா அதிபர் தலைமையில் விசேட அலகு நியமனம்!
Local
23 June 2026