நாட்டின் பல பகுதிகளில் இன்று (24) மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மேலும், ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதற்கும் மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளதால், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
Latest News
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: கோட்டாபயவின் மனு மீதான விசாரணை இன்று
Local
24 June 2026
டெங்கு நுளம்புகளின் அடர்த்தி அபாயகரமாக உயர்வு : சுகாதார பூச்சியியல் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Local
24 June 2026
24 மணித்தியால நீர் வெட்டு : பல பகுதிகளுக்கு நாளை மாலை வரை பாதிப்பு!
Local
24 June 2026
கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் 18 வயது யுவதி கைது
Local
24 June 2026
எரிசக்தி சந்தையில் மாற்றம் : மசகு எண்ணெய் விலையில் சரிவு - இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு!
Local
24 June 2026
கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் 35 கிலோகிராம் எடையுள்ள போதைப்பொருள் பறிமுதல்
Local
24 June 2026
கல்வித் துறையில் அதிரடி மாற்றம் : பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை காண பிரதமர் ஹரிணி அமரசூரிய உத்தரவு!
Local
24 June 2026
பனாமாவை வீழ்த்தி குரோஷியா வெற்றி!
Local
24 June 2026
நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை!
Local
24 June 2026
தெல்தெனியவில் உடலமாக மீட்கப்பட்ட இயன்முறை சிகிச்சையாளரின் சந்தேகத்திற்குரிய காதலன் யாழ்ப்பாணத்தில் கைது!
Local
24 June 2026