General24 June 2026

24 மணித்தியால நீர் வெட்டு : பல பகுதிகளுக்கு நாளை மாலை வரை பாதிப்பு!

லபுகம மற்றும் கலடுவாவ நீர்த்தேக்கங்களிலிருந்து மஹரகம வரை நீர் விநியோகம் செய்யும் பிரதான குழாயில் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், பல பகுதிகளில் 24 மணித்தியால நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று (24) மாலை 6.00 மணி முதல் நாளை (25) மாலை 6.00 மணி வரை நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.

இந்த நீர் வெட்டு காலப்பகுதியில் கலகெதர, ஹோமாகம, கொட்டாவ, பன்னிப்பிட்டிய, பெலன்வத்த மற்றும் மஹரகம பகுதிகள் பாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதான விநியோகக் குழாயில் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

இதனால் நுகர்வோருக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களுக்கு தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ள சபை, பாதிக்கப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தேவையான அளவு நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்வதுடன், கிடைக்கும் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes