General24 June 2026

டெங்கு நுளம்புகளின் அடர்த்தி அபாயகரமாக உயர்வு : சுகாதார பூச்சியியல் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!

டெங்கு இளம் குடம்பிகளின் அடர்த்தியை அளவிடப் பயன்படுத்தப்படும் சர்வதேச அலகான பிரிட்டோ (Breteau) குறியீட்டின் மதிப்பு, நாட்டின் பல பகுதிகளில் கணிசமாக உயர்ந்துள்ளதாக சுகாதார பூச்சியியல் சங்கம் தெரிவித்துள்ளது.

டெங்கு நோயை அதிகளவில் பரப்பும் ஏடிஸ் ஈஜிப்டை (Aedes aegypti) நுளம்புகளின் அடர்த்தியை மதிப்பிடுவதற்காக பிரிட்டோ குறியீடு பயன்படுத்தப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளின்படி, ஒரு நாட்டிலோ அல்லது பிராந்தியத்திலோ ஏடிஸ் ஈஜிப்டை நுளம்புகளின் அடர்த்தி மூன்றுக்கும் குறைவாகப் பராமரிக்கப்பட வேண்டும்.

எனினும், இலங்கையின் பல பகுதிகளில் தற்போது பிரிட்டோ குறியீட்டின் மதிப்பு உயர்ந்த நிலையில் காணப்படுவதாக சுகாதார பூச்சியியல் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, பல பகுதிகளில் தற்போது பிரிட்டோ குறியீட்டின் மதிப்பு 20 ஐ விட அதிகமாக உள்ளதாக, சுகாதார பூச்சியியல் சங்கத்தின் தலைவர் நஜித் சுமனசேன தெரிவித்துள்ளார்.

இது சாதகமான நிலைமையல்ல என்றும், கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் ஏடிஸ் ஈஜிப்டை நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் நஜித் சுமனசேன எச்சரித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes